ஐபிஎல் 2025: ரூ.20 கோடி கொடுத்து தக்க வைக்கப்படும் வீரர்கள் – அந்த மூவருக்கு மட்டும் சிறப்பு சலுகையா?

First Published | Oct 21, 2024, 1:09 PM IST

Top 3 Players Retain 20 Crores ahead of IPL 2025: ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, சில வீரர்கள் ரூ.20 கோடிக்கு மேல் தக்கவைக்கப்படலாம். ரஷித் கான், நிக்கோலஸ் பூரன் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

IPL 2025 Mega Auction, 3 Players May Retain More Than Rs 20 Crores

Top 3 Players Retain 20 Crores ahead of IPL 2025: ஒவ்வொரு அணியிலும் தகக் வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை வெளிடுவதற்கான கடைசி நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. இதற்கான பட்டியலை தயார் செய்யும் பணியில் ஒவ்வொரு அணியும் தீவிரமாக இருக்கின்றன.

Rashid Khan, Jasprit Bumrah, Nicholas Pooran, 3 Players May Retain More Than Rs 20 Crores

வரும் 24 அல்லது 25 ஆம் தேதிகளில் ஐபிஎல் ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்து முறையான அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள்ளாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tap to resize

3 Players May Retain More Than Rs 20 Crores

ஐபிஎல் ஏலத்திற்கு முன் சில வீரர்கள் கோடிகளை பொழிவார்கள். அப்படி கோடிகளில் புரளும் வீரர்கள் யார் யார் என்று பார்க்கலாம். இந்த ஏலத்திற்கு 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. அவை நேரடியாகத் தக்கவைக்கப்படலாம் அல்லது RTM கார்டை பயன்படுத்தலாம்.

Kolkata Knight Riders, IPL 2025 Mega Auction,

இந்த முறையும் பிசிசிஐ தக்கவைப்பது தொடர்பாக சில வித்தியாசமான விதிகளை வகுத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், மெகா ஏலத்திற்கு முன், கேப் செய்யப்பட்ட வீரர்கள் சிலர் பெரும் பணத்தைப் பெறலாம். ஐபிஎல் 2025க்கு முன் ரூ.20 கோடிக்கு மேல் தக்கவைக்கக்கூடிய மூன்று வீரர்களைப் பார்ப்போம்.

Gujarat Titans, IPL 2025 Auction, GT Retained Players

ரஷித் கான்:

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள ஆப்கானிஸ்தான் ஆல் ரவுண்டர் ரஷித் கான் இந்த பட்டியலில் இணைந்துள்ளார். கடந்த ஐபிஎல் 2024ல் ரூ.15 கோடிக்கு குஜராத் அணிக்காக விளையாடினார். கடந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகள் எடுத்தார்.

Rashid Khan, IPL 2025 Auction, Gujarat Titans

சிறந்த ஆல்ரவுண்டரான ரஷித் கானை ஐபிஎல் 2025க்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டி20 கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான பவுலர் மற்றும் பேட்ஸ்மேன் என்பது அனைவருக்கும் தெரியும். இதற்காக இந்த சீசனில் அவருக்கு ரூ.20 கோடி வரையில் கொடுக்க வாய்ப்பிருக்கிறது.

Lucknow Supergiants, Nicholas Pooran, IPL 2025 Auction

நிக்கோலஸ் பூரன்:

வெஸ்ட் இண்டீஸின் அதிரடி நிக்கோலஸ் பூரன் ஐபிஎல் 2025 க்கு லக்னோ சூப்பர்ஜெயிண்ட்ஸ் அணியால் தக்கவைக்கப்படுவார் என்று தகவல் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று சீசன்களாக எல்எஸ்ஜிக்காக விளையாடி வரும் பூரன், தனது அற்புதமான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆதலால், இந்த சீசனிலும் அவர் தக்க வைக்கப்படுவார் என்று தெரிகிறது.

Jasprit Bumrah, IPL 2025 Auction, Mumbai Indians

ஜஸ்ப்ரித் பும்ரா:

ஆபத்தான பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜஸ்ப்ரித் பும்ரா. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நட்சத்திர பேட்ஸ்மேன்கள் கூட பும்ராவின் பந்துவீச்சுக்கு பயப்படுகிறார்கள். பல போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி தேடி கொடுத்துள்ளார். இதனால், எந்த சூழலிலும் அவரை மும்பை இந்தியன்ஸ் விடுவிக்காது. இந்த முறை ரூ.20 கோடிக்கு மேல் கொடுத்தும் கூட ஐபிஎல் 2025க்கு பும்ராவை வைத்துக் கொள்ளலாம் என்று தெரிகிறது.

Latest Videos

click me!