150 ரன்கள் குவித்த சர்ஃபராஸ் கானுக்கு நீ, நானுன்னு போட்டி போடும் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ்!

First Published | Oct 21, 2024, 11:38 AM IST

Sarfaraz Khan IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 ஏலத்தில் சர்ஃபராஸ் கானை ஏலத்தில் எடுக்க 3 அணிகள் போட்டி போடுகின்றன. சர்ஃபராஸ் கான் சமீபத்திய டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் எடுத்தது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Sarfaraz Khan, IPL 2025 Auction

Sarfaraz Khan IPL 2025 Mega Auction: 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்திற்கான களம் தயாராகியுள்ளது. நவம்பர் 30 ஆம் தேதி ஐபிஎல் ஏலம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. எனினும் இன்னும் உறுதிபடுத்தவில்லை. தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலைத் தயாரிக்க அனைத்து அணிகளுக்கும் பிசிசிஐ ஏற்கனவே காலக்கெடுவை வழங்கியுள்ளது. அதற்கான வேலையில் அனைத்து அணிகளுமே தீவிரமாக உள்ளன. மேலும், முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுக்கவும் அணிகள் தயாராகி வருகின்றன. அதற்கான ரேஸில் இருப்பவர் சர்ஃபராஸ் கான் மட்டுமே.

Sarfaraz Khan, IND vs NZ, Test Cricket

பெங்களூருவில் நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாக 2ஆவது இன்னிங்ஸை சிறப்பாக விளையாடியது. இதில், ரோகித் சர்மா (52), விராட் கோலி (70), ரிஷப் பண்ட் (99) என்று ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளித்தனர். சர்ஃபராஸ் கான் 150 ரன்கள் குவித்தார்.

Tap to resize

India vs New Zealand 1st Test, Sarfaraz Khan

எனினும் இந்தப் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் 150 ரன்கள் குவித்த சர்ஃபராஸ் கான் தான் தற்போது ஹாட் டாபிக். அவர் ஐபிஎல் 2025 தொடரில் இடம் பெற இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரை ஏலத்தில் எடுப்பதற்கு முக்கியமான 3 அணிகள் போட்டி போடுகின்றன. அதைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

Sarfaraz Khan, PBKS, PBKS Retained Players, IPL 2025 Auction

பஞ்சாப் கிங்ஸ்:

ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக யாரை தக்க வைக்கலாம் என்ற முடிவை இன்னும் பஞ்சாப் கிங்ஸ் எடுக்கவில்லை என்ற தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு காரணம், மெகா ஏலத்தில் பேட்மேன்களுக்கு அதிக பணம் செலவிட அணியின் உரிமையாளர்கள் விரும்புவார்கள். ஏற்கனவே இந்த அணியில் இடம் பெற்றுள்ள சர்பராஸ் கானை பஞ்சாப் ஏலத்தில் வாங்கலாம். இதன் மூலமாக பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுப்பெறும். அதோடு தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்கின் பயிற்சியின் கீழ் அவரது ஆட்டம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2025 Auction, Royal Challengers Benglauru, Sarfaraz Khan

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ஒரு முறை கூட டிராபி ஜெயிக்காத ஆர்சிபி 2025 ஐபிஎல் ஏலத்தில் சர்ஃபராஸ் கானை ஏலம் எடுக்க பரீசிக்கலாம். ஆர்சிபியின் ஆரம்பகால ஐபிஎல் தொடர்களில் அந்த அணியில் இடம் பெற்று விளையாடியுள்ளார். விராட் கோலி விருப்பப்பட்டால் சர்ஃபராஸ் கான் ஆர்சிபிக்காக விளையாடுவார் என்று தெரிகிறது. ஆர்சிபிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்ற நிலையில், நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை தேடும் முயற்சியில் அந்த அணியின் நிர்வாகம் இறங்கியுள்ளது.

RR Retained Players, Sarfaraz Khan, IPL 2025

ராஜஸ்தான் ராயல்ஸ்:

திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் பெயர் பெற்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ். அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ஐபிஎல் 2025 ஏலத்தில் சர்ஃபராஸ் கானை ஏலம் எடுக்க முன்வருவார் என்று தெரிகிறது. ஏற்கனவே டிராவிட் பயிற்சியின் கீழ் சர்ஃபராஸ் கான் நீண்ட காலம் விளையாடியிருக்கிறார். இந்த சூழலில் சர்ஃபராஸ் கானை டிராவிட் அணிக்குள் கொண்டு வருவார் என்று தெரிகிறது.

Latest Videos

click me!