டி20 உலகக் கோப்பை 2024: 15 ஆண்டுகள் போராட்டம் – முதல் முறையாக சாம்பியனான நியூசிலாந்து மகளிர்!

First Published | Oct 21, 2024, 8:19 AM IST

New Zealand Champion in Womens T20 World Cup 2024: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

New Zealand Women vs South Africa Women, WT20 WC Final

New Zealand Champion in Womens T20 World Cup 2024: தென் ஆப்பிரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து நியூசிலாந்து மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 5 விக்கெட்டுகளுக்கு 158 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட்டுகளுக்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Womens T20 World Cup 2024 Champion, New Zealand Women

இதன் மூலமாக நியூசிலாந்து முதல் முதலாக மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றது. ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையைப் போலவே, மகளிர் டி20 உலகக் கோப்பையிலும் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோல்வியடைந்தது. ஆண்கள் கிரிக்கெட்டைப் போலவே மகளிர் கிரிக்கெட்டிலும் 'சோக்கர்ஸ்' என்ற அவப்பெயரைத் தவிர்க்க முடியவில்லை.

Latest Videos


South Africa Women vs New Zealand Women T20WC Final

ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து அபாரமாக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றது. நியூசிலாந்து கேப்டன் ஷோஃபி டிவைன் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் அணி வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றி பெறச் செய்தனர்.

WT20WC Final,

சாம்பியன் பட்டம் வென்ற நியூசிலாந்து

நியூசிலாந்து அணிக்காக அதிகபட்சமாக அமெலியா கெர் 43 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் சூசி பேட்ஸ் 32 ரன்களும், புரூக் ஹாலிடே 38 ரன்களும் எடுத்தனர். 159 ரன்களைத் துரத்திய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லாரா வுல்வர்ட் (33) மற்றும் தாஸ்மின் பிரிட்ஸ் (17) நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

Womens T20 World Cup 2024 Final

ஆனால் மற்ற வீரர்கள் யாரும் போராடவில்லை. நியூசி, அணிக்காக ரோஸ்மேரி மெய்ர் 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், அமெலியா 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டதால் அமெலியா கெர் ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருது வென்றார்.

T20 World Cup 2024 Final

மூன்றாவது இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி

2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து தோல்வியடைந்தது. 2009 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி வந்த நியூசிலாந்து, இங்கிலாந்திடம் தோற்றது. இதே போன்று, 2ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்ற நியூசி, வெஸ்ட் இண்டீஸிடம் தோற்று வெளியேறியது.

Brooke Halliday, Sophie Devine, Nonkululeko Mlaba, Laura Wolvaardt,

14 ஆண்டுகளுக்குப் பிறகு 15ஆவது ஆண்டில் மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்த நியூசிலாந்து இந்த முறை சாம்பியன் பட்டம் வென்றது. ஆண்கள் கிரிக்கெட்டைப் போலவே மகளிர் கிரிக்கெட்டிலும் நியூசிலாந்து சிறப்பாக செயல்படுகிறது. ஆண்கள் அணி இன்னும் டி20 உலகக் கோப்பையை வெல்லவில்லை என்றாலும், நியூசிலாந்து மகளிர் அணி இந்த சாதனையைப் படைத்துள்ளது.

Rosemary Mair, Womens T20 World Cup 2024 Champion,

நேற்று ஒரே நாளில் நியூசிலாந்து 2 சாதனைகளை படைத்துள்ளது. 36 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து ஆண்கள் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. இதே போன்று மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

click me!