WI vs IND: அடிச்சது ஒரே சிக்ஸர்.. ஆனால் அதிலும் ஒரு சாதனை படைத்த ரோஹித் சர்மா..! கோலியின் சாதனை காலி

First Published Aug 3, 2022, 5:08 PM IST

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஒரு சிக்ஸர் அடித்த ரோஹித் சர்மா, விராட் கோலியின் சாதனையை தகர்த்து புதிய மைல்கல்லை செட் செய்துள்ளார்.
 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 3வது போட்டி செயிண்ட் கிட்ஸில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி கைல் மேயர்ஸின் அதிரடி அரைசதத்தால் (73) 20 ஓவரில் 164 ரன்கள் அடித்தது.
 

165 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் சூர்யகுமார் யாதவின் அதிரடி அரைசதத்தால் (44 பந்தில் 76 ரன்கள்) இந்திய அணி 19 ஓவரில் இலக்கை அடித்து அபார வெற்றி பெற்றது.
 

இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா 5 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் 11 ரன்கள் அடித்திருந்த நிலையில், காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். அவரது ஃபிட்னெஸ் பரிசோதிக்கப்பட்டுவருகிறது.
 

இந்த போட்டியில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்தாலும், அதிலும் ஒரு சாதனை படைத்துள்ளார். இந்திய அணியின் கேப்டனாக டி20 கிரிக்கெட்டில் அவர் அடித்த 60வது சிக்ஸர் இது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். 
 

இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி 59 சிக்ஸர்களும், தோனி 34 சிக்ஸர்களும் அடித்துள்ளனர். இந்த பட்டியலில் கோலியுடன் முதலிடத்தை பகிர்ந்திருந்த ரோஹித் சர்மா, 60 சிக்ஸர்களுடன் இப்போது கோலியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். கோலி கேப்டன்சியிலிருந்து விலகிவிட்ட நிலையில், ரோஹித் சர்மா இந்த எண்ணிக்கையை அசாத்தியமானதாக உயர்த்திவிடுவார்.

click me!