IPL 2024: ரிஷப் பண்ட் முதல் தோனி வரையில், ஐபிஎல் 2024ல் கவனிக்கப்பட வேண்டிய டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள்!

First Published Mar 20, 2024, 1:46 PM IST

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் இன்னும் 2 நாட்களில் தொடங்க உள்ள நிலையில் இந்த சீசனில் கவனிக்கப்பட வேண்டிய இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, எம்.எஸ்.தோனி, கோலி, ரிங்கு சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

IPL 2024 Season 17

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் மார்ச் 22 ஆம் தேதி பிரம்மாண்டமான தொடக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்க இருக்கிறது. இந்த சீசனில் கவனிக்கப்பட வேண்டிய டாப் 5 இந்திய பேட்ஸ்மேன்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க….

CSK vs RCB

சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

ரிஷப் பண்ட்: Rishabh Pant Delhi Capitals Captain

கடந்த 2022 ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் இடம் பெறாத ரிஷப் பண்ட் தற்போது அணிக்கு திரும்பியுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் எப்படி விளையாடுவார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். கார் விபத்திற்கு பிறகு ஒரு போட்டியில் கூட ரிஷப் பண்ட் இடம் பெற்று விளையாடவில்லை. இது தான் அவரது முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Rishabh Pant

இதுவரையில் 98 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ரிஷப பண்ட், 2838 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 15 அரைசதங்களும், ஒரு சதமும் அடங்கும். மேலும், அதிகபட்சமாக 128* ரன்கள் எடுத்துள்ளார். டெல்லி அணிக்காக விளையாடி அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட் முதலிடத்தில் இருக்கிறார். 97 போட்டிகளில் விளையாடி 2838 ரன்கள் எடுத்துள்ளார்.

டேவிட் வார்னர் – 81 போட்டிகளில் விளையாடி 2382 ரன்கள் எடுத்துள்ளார்.

ஷ்ரேயாஸ் ஐயர் – 87 போட்டிகளில் விளையாடி 2375 ரன்கள் எடுத்துள்ளார்.

விரேந்தர் சேவாக் – 71 போட்டிகளில் விளையாடி 2174 ரன்கள் எடுத்துள்ளார்.

ரிங்கு சிங்: KKR Rinku Singh

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருபவர் ரிங்கு சிங். ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி அனைவரது பார்வையும் தன் மீது திருப்பிய ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் டி20 தொடரில் அசைக்க முடியாத இடம் கிடைத்தது. கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய ரிங்கு சிங் 474 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 4 அரைசதங்கள் அடங்கும். 31 பவுண்டரியும், 29 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 67* ரன்கள் எடுத்துள்ளார்.

Rinku Singh KKR

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்தது தான் ரிங்கு சிங்கை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. கடந்த சீசனில் கொல்கத்தா அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ரிங்கு முதலிடத்தில் இருக்கிறார். இதுவரையில் 31 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ரிங்கு சிங் 725 ரன்கள் எடுத்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா: Hardik Pandya MI Captain

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 17ஆவது ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா அறிமுகமாகிறார். இவரது தலைமையின் கீழ் மும்பை எப்படி விளையாடுகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா விளையாடிய 31 போட்டிகளில் 833 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு பிளேயராக 115 போட்டிகளில் விளையாடி 2309 ரன்கள் எடுத்துள்ளார்.

விராட் கோலி: Royal Challengers Bengaluru

எல்லோருடைய பார்வையும் விராட் கோலி மீது தான் இருக்கும். ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி தனிப்பட்ட காரணம் காரணமாக இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி மொத்தமாக 973 ரன்கள் குவித்துள்ளார். இதில் 7 அரைசதங்கள் மற்றும் 4 சதங்கள் அடங்கும். ஐபிஎல் தொடரில் 237 போட்டிகளில் விளையாடி 7263 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

Virat Kohli

ஜூன் மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்த ஐபிஎல் 2024 தொடர் தான் முக்கியமான தொடர். இதில், சிறப்பாக விளையாடி ரன்கள் குவிக்கும் பட்சத்தில் விராட் கோலியும் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.எஸ்.தோனி: Chennai Super Kings

கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த 16ஆவது சீசனில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது டிராபியை கைப்பற்றிய நிலையில், அதிகமுறை (5) டிராபியை கைப்பற்றிய கேப்டன்களின் பட்டியலில் தோனி இணைந்துள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடி அதிக வெற்றி பெற்ற கேப்டன்களின் பட்டியலில் எம்.எஸ்.தோனி முதலிடத்தில் இருக்கிறார். 226 போட்டிகளில் விளையாடி 133 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி சதவிகிதம் – 58.85 ஆகும்.

MS Dhoni- CSK

ரோகித் சர்மா 158 போட்டிகளில் – 87 வெற்றி – 55.06 வெற்றி சதவிகிதம்

கவுதம் காம்பீர் – 129 போட்டிகள் – 71 வெற்றி – 55.04 வெற்றி சதவிகிதம்

விராட் கோலி – 143 போட்டிகள் – 66 வெற்றி – 46.15 வெற்றி சதவிகிதம்

டேவிட் வார்னர் – 83 போட்டிகள் – 40 வெற்றி – 48.19 வெற்றி சதவிகிதம்

click me!