RCB - Royal Challengers Bangalore IPL 2024
இந்தியாவில் வரும் 22 ஆம் தேதி ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இதுவரையில் நடந்த 16 சீசன்களில் ஒரு முறை கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டிராபியை கைப்பற்றவில்லை.
IPL 2024
ஆனால், அணியில் எத்தனையோ கேப்டன்கள் வந்து சென்றுள்ளனர். அப்படியிருந்தும் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை. இந்த நிலையில் தான் இந்த சீசனில் ஆர்சிபி கண்டிப்பாக டிராபியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் பங்கேற்கு ஆர்சிபி அணியில் கவனிக்க வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க…
விராட் கோலி Virat Kohli RCB
எல்லோருடைய பார்வையும் விராட் கோலி மீது தான் இருக்கும். ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி தனிப்பட்ட காரணம் காரணமாக இங்கிலாந்திற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம் பெறவில்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு சீசனில் விராட் கோலி மொத்தமாக 979 ரன்கள் குவித்துள்ளார்.
Royal Challengers Bangalore
ஜூன் மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு இந்த ஐபிஎல் 2024 தொடர் தான் முக்கியமான தொடர். இதில், சிறப்பாக விளையாடி ரன்கள் குவிக்கும் பட்சத்தில் விராட் கோலியும் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவார்.
Virat Kohli, Faf du Plessis, Glenn Maxwell, IPL 2024, பேட்டிங் காம்போ:
ஆர்சிபி அணியில் டாப் ஆர்டரில் பாப் டூப்ளெசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், கேமரூன் க்ரீன் மற்றும் தினேஷ் கார்த்திக் என்று அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். ஆல்ரவுண்டரான வில் ஜாக்ஸூம் அணியில் இடம் பெற்றிருக்கிறார். அண்மையில் நடந்து முடிந்த எஸ்.ஏ.20 மற்றும் பிபிஎல் தொடரில் சதம் விளாசியிருக்கிறார்.
வேகப்பந்து வீச்சு காம்போ Mohammed Siraj
முகமது சிராஜ் அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர். இவர், தவிர லாக்கி பெர்குசன், அல்சாரி ஜோசஃப், டாம் கரண்,யாஷ் தயாள் ஆகியோர் கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ஏலம் எடுக்கப்பட்டனர். பவுலர்களை மட்டுமே தேர்வு செய்த ஏலத்தில் எடுத்த அணிகளில் ஆர்சிபி முதலிடம் பிடித்துள்ளது.
புதிய பயிற்சியாளர் Andy Flower
ஆர்சிபி அணியில் புதிய தலைமை பயிற்சியாளராக ஆண்டி பிளவர் இடம் பெற்றிருக்கிறார். இதற்கு முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆண்டி பிளவர், லக்னோ அணியை அடுத்தடுத்து 2 சீசனிலும் பிளே ஆஃப் வரை கொண்டு சென்றார்.
ஆகாஷ் தீப் - Aakash Deep
கடந்த சீசனில் ஆர்சிபி அணியில் இடம் பெற்றிருந்த ஆகாஷ் தீப், அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்திற்கு எதிரான ராஞ்சியில் நடந்த 4ஆவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் நியூ பாலில் ஜோடியாக பந்து வீசி விக்கெட்டுகள் கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைஷாக் விஜயகுமார் Vyshak Vijayakumar
பவுலர் வைஷாக் விஜயகுமார் மற்றும் பேட்ஸ்மேன் சுயாஷ் பிரபுதேசாய் இருவரும் அண்மையில் நடந்து முடிந்த ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளனர். வைஷாக் விஜயகுமார் 8 போட்டிகளில் விளையாடி 39 விக்கெட்டுகளும், பிரபுதேசாய் 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 687 ரன்களும் எடுத்துள்ளனர்.
Royal Challengers Bangalore
உள்ளூர் ஸ்டார்களுடன் இணைந்து வெளிநாட்டு ஹீரோக்கள் ஆர்சிபிக்காக இந்த முறை டிராபியை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.