Hardik Pandya at Anant Ambani and Radhika Merchant Wedding Event
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி, பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் - ஷைலா மெர்ச்சன்ட்டின் இளைய மகள் ராதிகா மெர்ச்சண்ட்க்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
MS Dhoni and Sakshi
இவர்களின் திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் மார்ச் 1 முதல் 3 வரை குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
Zaheer Khan at Anant Ambani, Radhika Merchant Pre Wedding Event
இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கும் 1,000 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பில் கேட்ஸ், மெட்டா தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க், கிரிக்கெட் பிரபலங்கள் என்று பல சர்வதேச பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
Sachin Tendulkar
இந்த நிலையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் டவுன்ஷிப் அருகே உள்ள ஜோக்வாட் கிராமத்தில் 'அன்னதான சேவையுடன் தொடங்கியது.
Suryakumar Yadav
இதன் ஒரு பகுதியாக, கிராமத்தைச் சேர்ந்த சுமார் 51,0000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அம்பானியின் குடும்ப பாரம்பரியத்தின் படி, இந்த அன்னதான சேவை தொடங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கிராம மக்களுக்கு குஜராத்தி உணவை வழங்கினர்.
Rohit Sharma
இந்த நிலையில், இந்த ப்ரீ வெட்டிங் ஷூட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி, சாக்ஷி தோனி, ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கர், ஜாகீர்கான், ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், குர்ணல் பாண்டியா, ரஷீத் கான், சாம் கரண், க்ரீம் ஸ்மித் என்று ஏராளமான பிரபலங்கள் குஜராத்திற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.