IND vs ENG 4th Test Live
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து 353 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்துக் கொடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
IND vs ENG 4th Test Live
பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. இதில், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ரோகித் சர்மா 2, சுப்மன் கில் 38, ரஜத் படிதார் 17, ரவீந்திர ஜடேஜா 12, சர்ஃபராஸ் கான் 14, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 என்று அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Dhruv Jurel
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 117 பந்துகள் பிடித்து 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரேல் இருவரும் நிதானமாக நின்று விளையாடி விக்கெட் சரிவிலிருந்து மீட்டு ரன்களும் குவித்தனர்.
Watch IND vs ENG 4th Test Live
இரண்டாம் நாளில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
Dhruv Jurel 90 Runs
குல்தீப் யாதவ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆகாஷ் தீப் களமிறங்கினார். ஆனால், அவருக்கு அதிக ஸ்டிரைக் கொடுக்காமல் விளையாடிய துருவ் ஜூரெல் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
Debut Player Dhruv Jurel
அதோடு சல்யூட் அடித்து தனது நன்றியை வெளிக்காட்டினார். அவருக்கு ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
India vs England 4th Test
அதன் பிறகு தொடர்ந்து விளையாடிய அவர் ஸ்பின் பவுலிங்கை நன்றாக பயன்படுத்தி இந்திய அணியை 300 ரன்கள் எட்ட உதவினார். இதற்கிடையில் ஆகாஷ் தீப் 9 ரன்களில் ஆட்டமிழக்க, ஜூரெல் 90 ரன்கள் எடுத்திருந்த போது டாம் ஹார்ட்லி பந்தில் கிளீன் போல்டானார். இறுதியாக இந்திய அணி 307 ரன்கள் மட்டுமே எடுத்து 46 ரன்கள் பின்தங்கியது.
Ranchi Test
இதையடுத்து டிர்ஸிங் ரூமிற்கு சென்ற துருவ் ஜூரெலுக்கு இந்திய அணியின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என்று அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்துள்ளனர். தனி ஒருவராக இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு 307 ரன்கள் எட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
India vs England 4th Test
ஆனால், 10 ரன்களில் அறிமுகப் போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டைவிட்டுள்ளார். எனினும், அவரது சிறப்பான பேட்டிங்க்ப் பார்த்த முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பலரும் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
Dhruv Jurel
இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனி பிறந்து வளர்ந்த ராஞ்சியில் ஒரு விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக இந்திய அணியில் அறிமுகமான ஜூரெல் 90 ரன்கள் எடுத்துக் கொடுத்து இந்திய அணி 307 ரன்கள் குவிக்க வித்திட்டுள்ளார்.