கடந்த 2010 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி, கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக டி20 உலகக் கோப்பையில் இடம் பெற்று விளையாடினார். இதுவரையில் விராட் கோலி 115 டி20 போட்டிகளில் விளையாடி 4008 ரன்களும், ஒரு சதமும், 37 அரைசதமும் அடித்துள்ளார். இதில், அதிகபட்சமாக 122 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.