Sakshi Pant Engagement: ரிஷப் பண்ட் சகோதரி சாக்‌ஷி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி!

Published : Jan 07, 2024, 03:23 PM IST

ரிஷப் பண்ட் வீட்டில் நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.தோனி கலந்து கொண்டுள்ளார்.

PREV
17
Sakshi Pant Engagement: ரிஷப் பண்ட் சகோதரி சாக்‌ஷி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி!
Rishabh Pant Sister Engagement

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான விக்கெட் கீப்பர்களில் ஒருவராக இருப்பவர் ரிஷப் பண்ட். தோனிக்கு பிறகு விக்கெட் கீப்பர் மற்றும் வலது கை பேட்ஸ்மேனாக வலம் வருபவர் கேஎல் ராகுல்.

27
Sakshi Pant Engagement

ஆனால், பண்ட் மட்டுமே ஒரு விக்கெட் கீப்பராக இடது கை பேட்ஸ்மேனாக இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கார் விபத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக சிகிச்சையில் இருந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

37
Sakshi Pant and Ankit Chaudhary Engagement

இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாட இருக்கிறார். அதற்காக தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். மேலும், கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்ட ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக வீரர்களை ஏலம் எடுத்தார்.

47

மேலும், துபாயில் தோனியுடன் இணைந்து டென்னிஸ் விளையாடியுள்ளார். அதோடு, தோனியுடன் இணைந்து தனது ஓய்வு நேரத்தை செலவிட்டு வந்தார். இந்த நிலையில், ரிஷப் பண்ட் வீட்டில் நடந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தோனி கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒருவேளை ரிஷப் பண்டிற்கு திருமண நிச்சயதார்த்தமோ என்று கேட்க தோன்றும்.

57
Rishabh Pant With His Mom

அதுதான் இல்லை, ரிஷப் பண்டின் சகோதரியான சாக்‌ஷியின் திருமண நிச்சயதார்த்தம் இன்று நடந்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக சாக்‌ஷி மற்றும் அங்கீத் சவுத்ரி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

67
Rishabh Pant With His Sister

இதைத் தொடர்ந்து தனது காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அங்கீத்தை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் தான் பெற்றோர்கள் முன்னிலையில் இன்று அங்கீத் சவுத்ரி மற்றும் சாக்‌ஷி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தோனி கலந்து கொண்டுள்ளார்.

77
MS Dhoni

தோனி, ஸ்டைலிஷான ஃபார்மல் உடையில் நீண்ட தலைமுடியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories