கேப்டவுன் வெற்றி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் உச்சத்திற்கு சென்ற இந்தியா!

Published : Jan 04, 2024, 09:34 PM IST

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

PREV
19
கேப்டவுன் வெற்றி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் உச்சத்திற்கு சென்ற இந்தியா!
World Test Championship 2025

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 1-1 என்று சமன் செய்யப்பட்டது. கேப்டவுனில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

29
World Test Championship 2023 - 2025 Points Table

இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் பிறகு 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்கா 2ஆவது இன்னிங்ஸ் விளையாடியது. இதில், எய்டன் மார்க்ரம் மட்டுமே 106 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா 176 ரன்கள் குவித்தது. இதன் மூலமாக இந்திய அணிக்கு 79 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

39
SA vs IND 2nd Test

அதன் பிறகு 2ஆவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கம் கொடுத்தார். அவர் 6 பவுண்டரிகள் உள்பட 28 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த சுப்மன் கில் 10, விராட் கோலி 12 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த ஷ்ரேயாஸ் ஐயர் வின்னிங் ஷாட்டாக பவுண்டரி அடிக்க இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

49
Cape Town Test

இந்த வெற்றியின் மூலமாக முதல் முறையாக கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கேப்டவுனில் நடந்த 6 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 4ல் தோல்வி அடைந்துள்ளது. மேலும், 2 போட்டியை டிரா செய்துள்ளது.

59
India vs South Africa 2nd Test

அதுமட்டுமின்றி எம்.எஸ்.தோனிக்கு பிறகு டெஸ்ட் தொடரை டிரா செய்த இந்திய அணியின் 2ஆவது கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். மேலும், முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் கேப்டவுனில் வெற்றி பெற்ற முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டை இந்திய அணி வெற்றியோடு தொடங்கியுள்ளது.

69
South Africa vs India 2nd Test, Cape Town

கடந்த 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 2ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறவே, கேப்டவுனில் 3ஆவது போட்டி நடந்தது. இந்தப் போட்டி டிராவில் முடியவே 3 போட்டிகள் கொனட் டெஸ்ட் தொடரானது 1-1 என்று சமன் செய்யப்பட்டது.

79
Mohammed Siraj Man of The Match

அதன் பிறகு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2 முறை தென் ஆப்பிரிக்கா சென்று தோல்வியோடு திரும்பியது. இந்த நிலையில் தான் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கேப்டவுனில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

89
South Africa vs India 2nd Test

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2 போட்டிகளில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஜஸ்ப்ரித் பும்ரா தொடர் நாயகன் விருது வென்றார்.

99
Jasprit Bumrah Player Of The Series

இந்த வெற்றியின் மூலமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 – 2025 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் தொடரில் இதுவரையில் இந்திய அணி 4 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில், 2ல் வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு டிரா என்று மொத்தமாக 26 புள்ளிகளுடன் 54.16 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories