350 ஹை-டெக் AI கேமரா.. பெங்களூரு மைதானத்தில் ரோபோ கண்காணிப்பு.. ஆர்சிபி ரசிகர்கள் குஷி!

Published : Jan 16, 2026, 08:23 PM IST

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சோகத்தைத் தொடர்ந்து, ஆர்.சி.பி அணி நிர்வாகம் 350 AI கேமராக்களைப் பொருத்த முன்வந்துள்ளது. இந்த நவீன பாதுகாப்பு நடவடிக்கை, ஐபிஎல் 2026 போட்டிகளை அங்கு நடத்த வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
14
பெங்களூரு சின்னசாமி மைதானம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் சுமார் 350 செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்களைப் பொருத்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி நிர்வாகம் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு (KSCA) முன்மொழிந்துள்ளது.

24
ஏன் இந்த நடவடிக்கை?

கடந்த ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி, ஆர்.சி.பி அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றதைக் கொண்டாடும் வகையில் மைதான வளாகத்தில் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் (Stampede) சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் போட்டிகள் நடத்த அரசு தடை விதித்தது.

ஓய்வுபெற்ற நீதிபதி மைக் கேல் டி குன்ஹா தலைமையிலான கமிஷன், இந்த மைதானம் பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்தத் தகுதியற்றது எனக் கூறி பல கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் சமீபத்தில் விராட் கோலி, ரிஷப் பந்த் போன்ற நட்சத்திரங்கள் விளையாட வேண்டிய விஜய் ஹசாரே கோப்பை போட்டிகள் கூட நகருக்கு வெளியே மாற்றப்பட்டன.

34
AI கேமராக்களின் சிறப்பம்சங்கள்

சுமார் ரூ. 4.5 கோடி செலவில் ஆர்.சி.பி நிர்வாகமே ஏற்க முன்வந்துள்ள இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் கீழ்க்கண்ட வசதிகள் கிடைக்கும்:

• நொடிக்கு நொடி கண்காணிப்பு: கூட்டத்தின் நடமாட்டத்தை நொடிக்கு நொடி கண்காணித்து, நெரிசல் ஏற்படாமல் தடுக்கலாம்.

• அத்துமீறல் கண்டறிதல்: அங்கீகாரம் இல்லாத நபர்கள் நுழைவது அல்லது வன்முறைச் சம்பவங்கள் நடப்பதை உடனே கண்டறிந்து போலீசாருக்கு எச்சரிக்கை அனுப்பும்.

• வரிசை மேலாண்மை: ரசிகர்கள் முறையாக வரிசையில் செல்வதை உறுதி செய்வதுடன், நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களைத் துல்லியமாகக் கண்காணிக்கும்.

44
ஐபிஎல் 2026-ல் போட்டி நடக்குமா?

இந்த அதிநவீன பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்ட பிறகு, சின்னசாமி மைதானம் மீண்டும் பாதுகாப்பானது என்று அரசு மற்றும் நீதிபதி கமிஷன் சான்றிதழ் அளித்தால் மட்டுமே, ஐபிஎல் 2026 போட்டிகள் இங்கு நடக்கும். ஆர்.சி.பி ரசிகர்கள் தங்கள் சொந்த மண்ணில் போட்டிகளைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories