ஓடிஐ தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் போட்டி என்பதால் நியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 284 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் சூப்பர் சதம் (92 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 112 ரன்கள்) விளாசினார்.
கேப்டன் சுப்மன் கில் அரை சதம் (56 ரன்கள்) அடித்தார். பின்பு பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 286 ரன்கள் எடுத்து வெற்றியை எட்டியது. நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் 17 பந்தில் 131 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.
24
3வது போட்டியில் 2 மாற்றங்கள்
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனுக்கு வந்துள்ளது. இரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் வரும் 18ம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது. தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் போட்டி இது என்பதால் 3வது போட்டியில் இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
34
தூக்கி வீசப்படும் நிதிஷ்குமார் ரெட்டி
அதாவது முதல் இரண்டு போட்டியிலும் எதிர்பார்த்தபடி பந்து வீசாத பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் டி20 ஸ்டார் பவுலர் அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் இடம்பெற உள்ளார். இதேபோல் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டியும் அணியில் இருந்து அதிரடியாக தூக்கி வீசப்படுகிறார்.
இரண்டாவது ஓடிஐயில் பேட்டிங்கில் சொதப்பிய நிதிஷ் குமார் ரெட்டி 21 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதேபோல் பவுலிங்கிலும் 2 ஓவர்கள் மட்டுமே வீசிய அவர் 12 ரன்கள் கொடுத்தார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தவில்லை.
பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அணிக்கு பயனளிக்காத நிதிஷ் குமார் ரெட்டி இந்திய அணியில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக துருவ் ஜூரெல் பிளேயிங் லெவனில் சேர்க்கபட உள்ளார். மற்றபடி அணியில் வேறு எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 3வது ஓடிஐக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரெல், ஹர்சித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ்.