IND VS NZ டி20 தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா?

Published : Jan 15, 2026, 05:32 PM IST

இந்திய அணிக்கு ஏற்கெனவே மற்றொரு பின்னடைவாக, திலக் வர்மா காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் முதல் மூன்று டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

PREV
14
வாஷிங்டன் சுந்தர் விலகல்

இந்திய அணி ஆல்ரவுண்டர் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், நியூசிலாந்துக்கு எதிரான வரவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். ஜனவரி 21 முதல் 31 வரை நடைபெறவிருக்கும் இந்தத் தொடர் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

 வதோதராவில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது ஏற்பட்ட பக்கவாட்டு காயம் காரணமாக ஏற்கெனவே ஓடிஐ தொடரில் இருந்து விலகிய வாஷிங்டன் சுந்தர் டி20 தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.

24
காயம் காரணமாக விலகல்

பிசிசிஐ இந்த காயத்தை அவரது இடது கீழ் விலா எலும்பில் ஏற்பட்ட கடுமையான அசௌகரியம் என்று விவரித்திருந்தது. தற்போதைய நிலையில், இந்த காயம் டி20 உலகக் கோப்பையில் அவர் பங்கேற்பதை பாதிக்குமா என்பது குறித்து எந்த தெளிவும் இல்லை.

 ஒருநாள் தொடருக்கான அணியில் வாஷிங்டனின் மாற்று வீரராக டெல்லியைச் சேர்ந்த பேட்டிங் ஆல்-ரவுண்டர் ஆயுஷ் பதோனி அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், டி20 அணியிலும் பதோனி சேர்க்கப்படுவாரா என்பதை தேர்வாளர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

34
வாஷிங்டன் போனாலும் பலமான இந்திய அணி

நியூசிலாந்து டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் இல்லாதது குறித்து இந்தியா அதிகம் கவலைப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பல முக்கிய ஆல்-ரவுண்டர்கள் அடுத்த வாரம் அணியில் இணைய உள்ளனர். ஹர்திக் பாண்ட்யா சிறப்பான ஃபார்மில் உள்ளார். 

டி20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்து டி20 தொடர் ஆகிய இரண்டிற்கும் துணை கேப்டனாக இருக்கும் அக்சர் படேல், அபிஷேக் சர்மா மற்றும் ஷிவம் துபே ஆகியோரும் அணியில் இருப்பார்கள்.

44
திலக் வர்மா விலகல்

இந்திய அணிக்கு ஏற்கெனவே மற்றொரு பின்னடைவாக, திலக் வர்மா காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் முதல் மூன்று டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா (முதல் மூன்று ஆட்டங்களுக்கு இல்லை), ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, அக்சர் படேல், ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி மற்றும் இஷான் கிஷன்.

Read more Photos on
click me!

Recommended Stories