இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 284 ரன்கள் எடுத்தது. தனியொருவனாக போராடிய கே.எல்.ராகுல் சூப்பர் சதம் (92 பந்துகளில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 112 ரன்கள்) விளாசி நாட் அவுட் ஆக திகழ்ந்தார். கேப்டன் சுப்மன் கில் அரை சதம் (53 பந்தில் 56 ரன்கள்) அடித்தார்.
24
நியூசிலாந்து அணி சூப்பர் பேட்டிங்
நியூசிலாந்து அணி தரப்பில் கிறிஸ்டியன் கிளார்க் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பின்பு பெரிய இலக்கை சேஸ் செய்த நியூசிலாந்து அணி 46/2 என பரிதவித்தது. டெவன் கான்வே (16), ஹென்றி நிக்கோல்ஸ் (10) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்பு ஜோடி சேர்ந்த சிஎஸ்கே முன்னாள் வீரரான டேரில் மிட்ச்செல்லும், வில் யங்கும் சிறப்பாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பொறுப்புடன் விளையாடிய வில் யங் அரை சதம் (98 பந்தில் 7 பவுண்டரியுடன் 87 ரன்கள்) அடித்து அவுட் ஆனார்.
34
டேரில் மிட்ச்செல் அட்டகாசமான சதம்
மறுபக்கம் குல்தீப், ஜடேஜாவுக்கு தண்ணி காட்டிய டேரில் மிட்ச்செல் கிளாசிக் ஷாட்களை விளையாடி சூப்பர் சதம் விளாசி அசத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்த கிளென் பிளிப்ஸ் (25 பந்தில் 32 ரன்) ஆட்டத்தை தித்திப்பாக முடித்து வைத்தார்.
நியூசிலாந்து அணி 47.3 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 286 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அட்டகாசமான சதம் அடித்த டேரில் மிட்ச்செல் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 117 பந்தில் 131 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தார். அவரே ஆட்டநாயகன் விருதும் வென்றார்.
முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதால் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனுக்கு வந்துள்ளது. 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் வரும் 18ம் தேதி இந்தூரில் நடைபெற உள்ளது.