கடந்த ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியிலிருந்து விராட் கோலி சிறப்பான ஃபார்மில் உள்ளார். அவர் தனது கடைசி 7 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 4 அரை சதங்களை அடித்து பிரம்மிக்க வைத்துள்ளார்.
இந்திய ஸ்டார் வீரர் கிரிக்கெட்டின் கிங் விராட் கோலி ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதலிடம் பிடித்து மாஸ் காட்டியுள்ளார். வதோதராவில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் எடுத்ததன் மூலம் கோலி மீண்டும் நம்பர் 1 இடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.
24
4 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடம்
விராட் கோலி தற்போது ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் 785 மதிப்பீட்டுப் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் உள்ள நியூசிலாந்தின் டேரில் மிட்செல்லை விட (784 புள்ளிகள்) ஒரு புள்ளி முன்னிலையில் உள்ளார். 2021ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பிறகு கோலி ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
மொத்தம் 825 நாட்கள் முதலிடத்தில் கிங் கோலி
ஐசிசி இணையதளத்தின்படி, விராட் கோலி முதன்முறையாக அக்டோபர் 2013-ல் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். தற்போது 11-வது முறையாக நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார். இன்றுவரை, அவர் மொத்தம் 825 நாட்கள் முதலிடத்தில் இருந்துள்ளார். இது ஒட்டுமொத்தமாக எந்தவொரு வீரரையும் விட 10-வது அதிகபட்சம் ஆகும். முதல் இந்திய வீரராக இதுதான் மெகா சாதனை.
34
அசுரத்தனமான ஃபார்மில் உள்ள கோலி
கடந்த ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேேலியாவில் நடந்த ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியிலிருந்து விராட் கோலி சிறப்பான ஃபார்மில் உள்ளார். அவர் தனது கடைசி 7 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள் மற்றும் 4 அரை சதங்களை அடித்து பிரம்மிக்க வைத்துள்ளார்.
கடந்த 2025ம் ஆண்டு விராட் கோலி 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 65.10 என்ற சிறப்பான சராசரியில் 651 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அந்த ஆண்டில் இந்தியாவின் முன்னணி ரன் ஸ்கோரராக உருவெடுத்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியிலும் விராட் கோலி ஜொலித்தார். ஐந்து போட்டிகளில் 54.50 சராசரியில் 218 ரன்கள் எடுத்தார். அந்தத் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்தார். இப்போது நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் 93 ரன்கள் அடித்த விராட் கோலி, இந்திய அணியை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.