வதோதராவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. 2வது ஒருநாள் போட்டி குஜராத்தில் நாளை (ஜனவரி 14) நடைபெற உள்ளது.
வதோதராவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. விராட் கோலி 93 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். கோலி ஆட்டமிழந்த பிறகு இந்திய அணி தடுமாறியது. ஆனால் கே.எல்.ராகுல் பொறுமையாக விளையாடி ஓவருக்கு முந்தைய ஓவரில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
23
ரோகித், விராட் கோலி சொதப்புவார்கள்
இந்தியா, நியூசிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி குஜராத்தில் நாளை (ஜனவரி 14) நடைபெற உள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் ரன் குவிக்க மாட்டார்கள் என நம்புவதாக நியூசிலாந்து பேட்டர் நிக் கெல்லி தெரிவித்துள்ளார்.
"உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்போது, ஒரு கிரிக்கெட் ரசிகராக அது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. ஆனால் களத்தில் இருக்கும் வீரர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 2வது போட்டியில் அதிக ரன்கள் எடுக்க மாட்டார்கள் என நம்புகிறேன்" என்று நிக் கெல்லி செய்தியாளர்களிடம் கூறினார்.
33
தொடரை சமன் செய்வோம்
தொடர்ந்து பேசிய நிக் கெல்லி, ''முதல் ஒருநாள் போட்டி ஒரு விறுவிறுப்பான ஆட்டமாக இருந்தது. இறுதியில் அது மிகவும் இறுக்கமாக மாறியது. கடந்த 24 முதல் 48 மணி நேரத்தில் நாங்கள் நிறைய விவாதித்துள்ளோம். அதனால் நாளை நாங்கள் களமிறங்கி வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்வோம் என நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் சுந்தர் விலகல்
இதற்கிடையே முதல் ஒருநாள் போட்டியில் காயம் அடைந்த வாஷிங்டன் சுந்தர் ஓடிஐ தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே அதிரடி வீரர் ரிஷப் பண்ட் காயம் காரணமாக விலகியதும் அவருக்கு பதிலாக துருவ் ஜூரல் சேர்க்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.