விராட் கோலி: நியூசிலாந்துக்கு எதிராக விராட் கோலி இன்னும் ஒரு ரன் எடுத்தால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார். இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்த கிங் கோலி தயாராகி வருகிறார்.
சாதனைகளின் நாயகன் விராட்.. சச்சினை முந்த இன்னும் ஒரு ரன்
இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலி, தனது சிறந்த ஃபார்மில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக ஆடி, சச்சினின் சாதனையை முறியடிக்க ஒரு ரன் தொலைவில் உள்ளார்.
25
சச்சின் சாதனைக்கு ஆபத்து.. ஒரு ரன்னில் நம்பர் 1
ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக சச்சின் 1750 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது கோலியும் அதே ரன்களை எடுத்து சமன் செய்துள்ளார். அடுத்த போட்டியில் 1 ரன் எடுத்தால் சச்சினை முந்திவிடுவார்.
35
கோலியின் நம்பமுடியாத ஃபார்ம்.. தொடர்ச்சியாக 5 அரைசதங்கள்
விராட் கோலி தனது அபாரமான ஃபார்மை தொடர்ந்து வருகிறார். கடந்த 5 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 5 அரைசதங்களை அடித்து, பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்கிறார்.
முதல் ஒருநாள் போட்டியில் 93 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கோலி.
55
ஆட்ட நாயகன் விருதுகள் குறித்து கோலியின் சுவாரஸ்யமான கருத்துகள்
போட்டியின் ஆட்டநாயகன் விருது பெற்ற கோலி, 'விருதுகளை நான் கணக்கிடுவதில்லை, அவற்றை என் அம்மாவிடம் கொடுத்துவிடுவேன்' என்று கூறினார். அணியின் வெற்றியே முக்கியம் என அவர் குறிப்பிட்டார்.