மகளிர் பிரீமியர் லீக்: ஆர்சிபி அணிக்கு கேப்டனான ஸ்மிருதி மந்தனா!

Published : Feb 18, 2023, 07:06 PM IST

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றுள்ள ஸ்மிருதி மந்தனா அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

PREV
16
மகளிர் பிரீமியர் லீக்: ஆர்சிபி அணிக்கு கேப்டனான ஸ்மிருதி மந்தனா!
மகளிர் பிரீமியர் லீக் - ஸ்மிருதி மந்தனா

ஆண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப் போன்று இந்த ஆண்டு முதல் மகளிருக்காக பிரீமியர் லீக் தொடர் நடத்தப்படுகிறது. மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், யுபி வாரியர்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ் என்று மொத்தம் 5 அணிகள் பங்கு பெற்றுள்ளன.
 

26
மகளிர் பிரீமியர் லீக் - ஸ்மிருதி மந்தனா

இந்த 5 அணிகளில் இடம் பெறும் வீராங்கனைகளுக்கான ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்தது. இதில், முதல் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா ஏலம் விடப்பட்டார்.

36
மகளிர் பிரீமியர் லீக் - ஸ்மிருதி மந்தனா

இந்த ஏலத்திற்கான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. ஒருவழியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.3.40 கோடிக்கு ஸ்மிருதி மந்தனாவை ஏலத்தில் எடுத்தது.

46
மகளிர் பிரீமியர் லீக் - ஸ்மிருதி மந்தனா

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்லே கார்ட்னெர் மற்றும் இங்கிலாந்து ஆல்ரவுடண்டர் சைவர் பிரண்ட் ஆகிய இருவரும் தலா ரூ.3.2 கோடிக்கு விலைபோனார்கள்.
 

56
மகளிர் பிரீமியர் லீக்

ஆர்சிபி அணி:

ஸ்மிரிதி மந்தனா, சோஃபி டிவைன், எலைஸ் பெர்ரி, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், எரின் பர்ன்ஸ், திஷா கசட், இந்திரானி ராய், ஷ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, ஆஷா ஷோபனா, ஹீத்தர் நைட், டேன் வான் நியெகெரிக், ப்ரீத்தி போஸ், பூனம் கெம்னார், கோமல் ஸன்ஸாத், மேகான் ஸ்கட்,  சஹானா பவார்.

66
மகளிர் பிரீமியர் லீக்

வரும் மார்ச் 4 ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையில் இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடக்கிறது. இந்த நிலையில், ஆர்சிபி அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி மற்றும் பாப் டூ பிளசிஸ் இருவரும் வீடியோ மூலமாக இதனை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories