நோபால் எல்லாம் அப்புறம் தான்: 500 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!

Published : Mar 01, 2023, 02:31 PM ISTUpdated : Mar 01, 2023, 04:58 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட் கைப்பற்றியதன் மூலமாக ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் 5000 ரன்கள் மட்டும் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய 2ஆவது இந்திய வீரர் என்ற் சாதனையை படைத்துள்ளார்.  

PREV
16
நோபால் எல்லாம் அப்புறம் தான்: 500 விக்கெட் கைப்பற்றி சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா!
ரவீந்திர ஜடேஜா 500 விக்கெட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் கேஎல் ராகுல் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சுப்மன் கில் இடம் பெற்றிருந்தார். முகமது ஷமியும் அணியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம் பெற்றார்.
 

26
ரவீந்திர ஜடேஜா 500 விக்கெட்

இந்திய அணியில் கேஎல் ராகுலுக்குப் பதிலாக சுப்மன் கில் மற்றும் முகமது ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டனர். ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர். முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா 2 முறை அவுட்டானாலும் அம்பயர் அவுட் கொடுக்காததால் தப்பினார். மிட்செல் ஸ்டார் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்சானார். ஆனால், அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் ரெவியூ எடுக்கவில்லை.
 

36
ரவீந்திர ஜடேஜா 500 விக்கெட்

இதே போன்று 4ஆவது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால், அதற்கும் ரெவியூ எடுக்கப்படவில்லை. எனினும், மேத்யூ குன்மேன் ஓவரில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். டக் அவுட்டில் வெளியேற வேண்டிய ரோகித் சர்மா 12 ரன்களில் வெளியேறினர். 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஸ்டெம்பிங் முறையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.
 

46
ரவீந்திர ஜடேஜா 500 விக்கெட்

இதே போன்று தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 27 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து சுப்மன் கில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இறுதியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 109 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்தது.
 

56
ரவீந்திர ஜடேஜா 500 விக்கெட்

பந்து வீச்சில் ஆஸ்திரேலியா தரப்பில் மேத்யூ குன்மேன் 5 விக்கெட் கைப்பற்றினார். நாதன் லையான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டோட் முர்ஃபி 3ஆவது முறையாக விராட் கோலி விக்கேட்டை கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது.
 

66
ரவீந்திர ஜடேஜா 500 விக்கெட்

இதில், ஆஸ்திரேலியா 12 ரன் எடுத்திருந்த போது டிரேவிஸ் ஹெட் எல்பி டபுள்யூ முறையில் ஜடேஜா ஓவரில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை கைப்பற்றியதன் மூலமாக ரவீந்திர ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட் கைப்பற்றிய 2ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் 5000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் 5000 ரன்களுக்கு மேல் எடுத்து 500 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories