உன் குத்தமா, என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல - ஆஸி., சுழலுக்கு சிக்கி சின்னா பின்னமான இந்தியா!

First Published Mar 1, 2023, 11:44 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து உணவு இடைவேளை வரையில் 7 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா, தற்போது 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தூரில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
 

இந்தூர் டெஸ்ட்

இந்திய அணியில் கேஎல் ராகுலுக்குப் பதிலாக சுப்மன் கில் மற்றும் முகமது ஷமிக்குப் பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டனர். ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் இந்திய அணியின் ரன் கணக்கை தொடங்கினர். 

ரோகித் சர்மா அவுட் ஆனா இல்லை

முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா 2 முறை அவுட்டானாலும் அம்பயர் அவுட் கொடுக்காததால் தப்பினார். மிட்செல் ஸ்டார் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்சானார். ஆனால், அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் ரெவியூ எடுக்கவில்லை.
 

Image credit: PTI

இதே போன்று 4ஆவது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஆனால், அதற்கும் ரெவியூ எடுக்கப்படவில்லை. எனினும், மேத்யூ குன்மேன் ஓவரில் ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். டக் அவுட்டில் வெளியேற வேண்டிய ரோகித் சர்மா 12 ரன்களில் வெளியேறினர். 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்துள்ளார். 
 

ரோகித் சர்மா

இதற்கு முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஸ்டெம்பிங் முறையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.
 

ரோகித் சர்மா ஸ்டெம்பிங்

இதே போன்று தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 27 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சுப்மன் கில்

இவரைத் தொடர்ந்து சுப்மன் கில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு புஜாரா (1), ஷ்ரேயாஸ் ஐயர் (4) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 45 ரன்களுக்கு இந்தியா 5 விக்கெட் இழந்து தடுமாறியது.
 

விராட் கோலி

இதையடுத்து விராட் கோலி மற்றும் ஸ்ரீகர் பரத் இணைந்து 6ஆவது விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்தனர். விராட் கோலி 22 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஸ்ரீகர் பரத்தும் 17 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். தற்போது உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு  ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 
 

ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர்கள்

ஆஸ்திரேலியா தரப்பில் மேத்யூ குன்மேன் மற்றும் நாதன் லையான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளனர். டோட் முர்ஃபி 3ஆவது முறையாக விராட் கோலி விக்கேட்டை கைப்பற்றினார்.

click me!