சூர்யகுமார் யாதவை இந்திய அணியில் எடுக்காதது ஏன்..? முதல் முறையாக மௌனம் கலைத்த ரவி சாஸ்திரி

First Published Nov 2, 2020, 4:58 PM IST

சூர்யகுமார் யாதவை இந்திய அணியில் எடுக்காதது குறித்து தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
 

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய டி20 அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெறாதது, அணி தேர்வு குறித்த கடும் விமர்சனத்துக்கு வழிவகுத்தது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போட்டிகளிலும் ஐபிஎல்லிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்துவரும் சூர்யகுமார் யாதவ். ஆனாலும் அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டுவருகிறது.
undefined
ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி தொடர் என உள்நாட்டு தொடர்கள் அனைத்திலும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவரும் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல்லிலும் ஸ்கோர் செய்கிறார். கடந்த ஐபிஎல் சீசனில் 424 ரன்களையும், 2018 ஐபிஎல் சீசனில் 512 ரன்களையும் குவித்த சூர்யகுமார் யாதவ், இந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் 362 ரன்களை குவித்துள்ளார். போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பயனுள்ள இன்னிங்ஸை அணிக்காக ஆடுபவர் சூர்யகுமார் யாதவ். ஆனாலும் புறக்கணிக்கப்படுகிறார்.
undefined
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் புறக்கணிக்கப்பட்டதற்கு பிறகு, ஆர்சிபிக்கு எதிராக நடந்த போட்டியில், செலக்டார்ஸின் செவிட்டில் அறைந்தாற்போல அதிரடியான மற்றும் அற்புதமான ஒரு இன்னிங்ஸை ஆடினார். 43 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்து, மும்பை அணிக்கு வெற்றி பெற்றுக்கொடுத்தார்.
undefined
சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டது முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு மேல் அவர் என்னதான் செய்ய வேண்டும் என்று திலிப் வெங்சர்க்கார், ஹர்பஜன் சிங் ஆகிய முன்னாள் வீரர்கள் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
undefined
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இளம் வீரர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் மட்டுமல்ல; அவரை போல இன்னும் 3-4 வீரர்கள் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருக்கிறார்கள். திறமையும் அனுபவமும் கலந்த வலுவான அணியாக இருக்கும் ஒரு அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் தான். அதனால் பொறுமையாக இருக்க வேண்டும்.
undefined
எனது காலத்தில் இந்திய அணியில் 1-6 பேட்டிங் ஆர்டர் மிக வலுவானது. அந்த பேட்டிங் ஆர்டரில் புதிதாக ஒருவர் நுழைவது என்பதே நடக்காத காரியம். அப்படியான நேரத்தில் உள்நாட்டு போட்டிகளில் அருமையாக ஆடி மலை மலையாக ரன்களை குவித்த ஒரு வீரர், இந்திய அணி கதவை தட்டிக்கொண்டிருப்பார்.
undefined
எல்லா இளம் வீரர்களுக்கும் எனது மெசேஜ் என்னவென்றால், பொறுமையாக காத்திருங்கள்.. உங்களுக்கான வாய்ப்பு வரும்போது அதை இரு கைகளால் பற்றிக்கொள்ளுங்கள். ஆனால் அதுவரை, எந்த சூழலிலும் உங்களது பாசிட்டிவான மனநிலையை மட்டும் தளரவிட்டு விடாதீர்கள் என்று சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
undefined
click me!