#AUSvsIND ஹிட்மேன் இஸ் பேக்.. நாளை(ஞாயிறு) முக்கிய முடிவு

First Published Oct 31, 2020, 4:07 PM IST

ரோஹித் சர்மாவின் உடற்தகுதியை பிசிசிஐ மருத்துவக்குழு நாளை(ஞாயிற்றுக்கிழமை) பரிசோதிக்கவுள்ளது.
 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் ஐபிஎல் 13வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கும் நிலையில், ஐபிஎல் முடிந்ததும் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணி, 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.
undefined
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான 3 விதமான போட்டிகளுக்குமான இந்திய அணி கடந்த 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.
undefined
ஐபிஎல்லின்போது, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டதால், கடந்த சில போட்டிகளில் அவர் ஆடவில்லை. இந்த சீசனில் அவர் இனிமேல் ஆடமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
undefined
ரோஹித் சர்மா அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் மும்பை இந்தியன்ஸ் அணி, ரோஹித் சர்மா வலையில் பயிற்சி செய்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டது. ரோஹித் சர்மாவிற்கு காயம் என்பதால் அவர் இந்திய அணியில் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்ட நிலையில், அவர் பயிற்சி செய்த வீடியோ, அவரது புறக்கணிப்பு குறித்த சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் எழுப்பியது.
undefined
ரோஹித் சர்மா பயிற்சி செய்கிறார் என்றால், அவர் ஏன் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்ற கேள்வி எழுந்தது. பயிற்சியில் ஆடமுடியும் என்றால், அது என்ன மாதிரியான காயம் என்று கேள்வி எழுப்பியிருந்த கவாஸ்கர், ரோஹித்தை இந்திய அணியில் எடுக்காததற்கான உண்மையான காரணத்தை ரசிகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
undefined
ரோஹித் சர்மா வலையில் பயிற்சி செய்த வீடியோ வெளியானதால், ரோஹித் வேண்டுமென்றே இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதற்கு காரணம், ரோஹித் உடற்தகுதி பெற்றுவிடுவாரா என்பது குறித்த பரிசோதித்து முடிவெடுக்கும் முன்பாகவே, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான துணை கேப்டனாக ராகுல் அறிவிக்கப்பட்டார்.
undefined
இந்நிலையில், ரோஹித் சர்மாவின் காயத்தையும் உடற்தகுதியையும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) பிசிசிஐ மருத்துவக்குழு ரோஹித்தின் உடற்தகுதியை பரிசோதிக்கவுள்ளதாக யாஹூவிற்கு அளித்த பேட்டியில் பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார்.
undefined
நாளை ரோஹித்தின் உடற்தகுதியை பரிசோதித்த பின்னர், ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம்பெறுவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். தொடையில் காயம் இருந்தால், நடப்பதற்கோ, பேட்டிங் ஆடுவதற்கோ எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் வேகமாக ரன் ஓடும்போதும், ஒரு ரன்னை வேகமாக ஓடிமுடித்துவிட்டு, திரும்பி 2வது ரன் ஓடும்போதோ தான், அந்த காயம் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே அவையெல்லாம் பரிசோதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
undefined
click me!