சூர்யகுமார் யாதவை ஏன் இந்திய அணியில் எடுக்கல..? கோதாவில் இறங்கும் தாதா..?

First Published Oct 30, 2020, 5:03 PM IST

சூர்யகுமார் யாதவை இந்திய அணியில் எடுக்காதது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
 

ஐபிஎல் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்துக்கான 3 விதமான போட்டிகளுக்குமான இந்திய அணி கடந்த 26ம் தேதி அறிவிக்கப்பட்டது.
undefined
இந்த தொடருக்கான டி20 அணியில் சூர்யகுமார் யாதவின் பெயர் இடம்பெறாதது முன்னாள் ஜாம்பவான்கள் மற்றும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக உள்நாட்டு போட்டிகளிலும் ஐபிஎல்லிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்துவரும் சூர்யகுமார் யாதவ். ஆனாலும் அவருக்கு இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டுவருகிறது.
undefined
ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி தொடர் என உள்நாட்டு தொடர்கள் அனைத்திலும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்துவரும் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல்லிலும் ஸ்கோர் செய்கிறார். கடந்த ஐபிஎல் சீசனில் 424 ரன்களையும், 2018 ஐபிஎல் சீசனில் 512 ரன்களையும் குவித்த சூர்யகுமார் யாதவ், இந்த சீசனில் 11 இன்னிங்ஸ்களில் 362 ரன்களை குவித்துள்ளார். போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பயனுள்ள இன்னிங்ஸை அணிக்காக ஆடுபவர் சூர்யகுமார் யாதவ். ஆனாலும் புறக்கணிக்கப்படுகிறார்.
undefined
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 அணியில் புறக்கணிக்கப்பட்டதற்கு பிறகு, ஆர்சிபிக்கு எதிராக நடந்த போட்டியில், செலக்டார்ஸின் செவிட்டில் அறைந்தாற்போல அதிரடியான மற்றும் அற்புதமான ஒரு இன்னிங்ஸை ஆடினார். 43 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 79 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் இருந்து, மும்பை அணிக்கு வெற்றி பெற்றுக்கொடுத்தார்.
undefined
நடப்பு ஐபிஎல் சீசனில் ஆடிய விதம் மற்றும் தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் தான் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் வருண் சக்கரவர்த்திக்கெல்லாம் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. உள்நாட்டு போட்டிகளில் பெரியளவில் வருண் ஆடியதில்லை. ஐபிஎல்லில் இந்த சீசனில் தான் ஓரளவிற்கு பந்துவீசியுள்ளார். ஆனாலும் அவருக்கெல்லாம் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்போது, கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் சூர்யகுமாருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி.
undefined
சூர்யகுமார் யாதவின் புறக்கணிப்பு குறித்த அதிருப்தியை ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் வெளிப்படுத்திவருகின்றனர். ”இன்னும் சூர்யகுமார் யாதவ் என்னதான் செய்ய வேண்டும்? ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு ரூல்ஸா? அவரது ரெக்கார்டை எடுத்து பாருங்கள்” என்று ஹர்பஜன் சிங் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
undefined
சூர்யகுமார் யாதவ் புறக்கணிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலிப் வெங்சர்க்கார், தற்போதைக்கு இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ், இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டது உண்மையாகவே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது. திறமை மற்றும் ஃபார்மின் அடிப்படையில் சூர்யகுமார் யாதவை, தற்போதைய இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர்களுடன் ஒப்பிடமுடியும். கன்சிஸ்டண்ட்டாக ரன்களை குவித்துவரும் அவர், இந்திய அணியில் இடம்பெற இன்னும் என்னதான் செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.
undefined
ஒரு பேட்ஸ்மேனுக்கு அவரது 26 - 34 வயதுதான் கெரியரின் பீக். 30 வயதான சூர்யகுமார், தற்போது அவரது கெரியரில் செம ஃபார்ம் மற்றும் ஃபிட்னெஸுடன் இருக்கிறார். ஆனாலும் அவரை ஏன் எடுக்கவில்லை? ரோஹித் சர்மாவும் அணியில் இல்லாத நிலையில், மிடில் ஆர்டருக்கு வலு சேர்க்கும் விதமாக சூர்யகுமாரை கண்டிப்பாக அணியில் எடுத்திருக்க வேண்டும். சூர்யகுமார் யாதவை அணியில் எடுக்காததற்கான காரணத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி கண்டிப்பாக கேட்க வேண்டும் என்றும் திலிப் வெங்சர்க்கார் வலியுறுத்தியுள்ளார்.
undefined
click me!