விராட் கோலியை நீக்குமளவிற்கு தில்லான தேர்வாளர் இந்தியாவில் பிறக்கவே இல்ல

First Published Jul 17, 2022, 3:18 PM IST

விராட் கோலியை இந்திய அணியில் புறக்கணிக்குமளவிற்கான தேர்வாளர் இந்தியாவில் பிறக்கவில்லை என்று பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் ரஷீத் லத்தீஃப் கருத்து கூறியுள்ளார்.
 

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவந்த நிலையில், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறிவருகிறார்.
 

சதம் அடிக்கவில்லை என்றாலும், நன்றாக ஆடி அரைசதம், 70-80 ரன்களாவது அடித்துக்கொண்டிருந்தார். ஆனால் கடந்த ஓராண்டாக அதுவும் அடிக்காமல், மோசமான ஃபார்மில் இருந்துவருகிறார்.
 

டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிக்கிறது. முன்னாள் வீரர்கள் பலரும் விராட் கோலி குறித்து பலவிதமான கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் செம கெத்தாக வலம்வந்த விராட் கோலி, இன்றைக்கு கூனிக்குருகி இருக்கிறார். பலரது விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார். கிரிக்கெட் தெரிந்தவர், தெரியாதவரெல்லாம் ஆலோசனை வழங்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார் கோலி.
 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயத்தால் ஆடாத விராட் கோலி, 2வது ஒருநாள் போட்டியில் ஆடினார். அவர் மீது வழக்கம்போலவே பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நேர்த்தியான ஷாட்டுகளை ஆடி நன்றாக தொடங்கிய விராட் கோலி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

கோலி தொடர்ந்து சொதப்பி வர, அவரை அணியிலிருந்து நீக்கி ஓய்வு கொடுக்க வேண்டும், ஃபார்மில் இல்லாத அவருக்கு பதிலாக ஃபார்மில் உள்ள திறமையான வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற பல வலியுறுத்தல்கள் எழுந்துவருகின்றன. ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா கோலிக்கு ஆதரவாக இருக்கிறார்.

இந்நிலையில், கோலி குறித்து கருத்து கூறியுள்ள பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் ரஷீத் லத்தீஃப், விராட் கோலியை புறக்கணிக்குமளவிற்கான தேர்வாளர் இந்தியாவில் பிறக்கவேயில்லை என்று கருத்து கூறியுள்ளார். அந்தளவிற்கு கோலி இந்திய கிரிக்கெட்டில் பவர்ஃபுல்லான வீரர் என்று ரஷீத் லத்தீஃப் கூறுகிறார்.

click me!