ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்தார் பும்ரா..!

First Published Jul 13, 2022, 3:50 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, ஐசிசி ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 

கெனிங்டன் ஓவலில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 110 ரன்களுக்கு சுருண்டது. பும்ராவின் அபாரமான பவுலிங்கில் மண்டியிட்டு சரணடைந்தது இங்கிலாந்து அணி. பும்ரா அபாரமாக பந்துவீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

111 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி அரைசதத்தால்(58 பந்தில் 76 ரன்கள்) 19வது ஓவரிலேயே இலக்கை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

இந்த போட்டியில் பும்ரா வீசியது அவரது கெரியர் பெஸ்ட் பவுலிங் ஆகும். மேலும் இங்கிலாந்தில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியல் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்கள், ஒருநாள் கிரிக்கெட்டில் பெஸ்ட் பவுலிங்கின் டாப் லிஸ்ட் என எலைட் லிஸ்ட்டுகளில் இடம்பிடித்தார் பும்ரா.
 

மேலும், இந்த போட்டியில் 7.2 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஐசிசி ஒருநாள் பவுலர்கள் தரவரிசையில் 5 இடங்கள் முன்னேறி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் பும்ரா. 718 புள்ளிகளுடன் ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் 712 புள்ளிகளுடன் தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ளார்.
 

click me!