பாகிஸ்தான் வெற்றியை ஜீரணிக்க முடியாத பிசிசிஐ..! வாய்க்கு வந்ததை எல்லாம் பேசும் ரமீஸ் ராஜா

First Published Dec 29, 2022, 8:07 PM IST

ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஃபைனலுக்கு பாகிஸ்தான் முன்னேறியதை ஜீரணிக்க முடியாமல் தான் பிசிசிஐ, தேர்வுக்குழுவை நீக்கியது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியர் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
 

பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய 2 பெரிய தொடர்களிலும் ஃபைனலுக்கு முன்னேறிய நிலையில், 2 ஃபைனலிலும் தோற்று கோப்பையை இழந்தது. பாகிஸ்தான் அணி தேர்வு பாரபட்சமாக இருப்பதாக தொடர்ந்து விமர்சனம் இருந்துவந்தது. 

அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தி நிலவிவந்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒயிட்வாஷ் ஆகி வரலாற்று படுதோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி. அதன்விளைவாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டார். பாகிஸ்தான் அணி தேர்வுக்குழு தலைவரும் நீக்கப்பட்டு புதிய தேர்வுக்குழு தலைவராக ஷாஹித் அஃப்ரிடி நியமிக்கப்பட்டார். 

தினேஷ் கார்த்திக் சொன்னது நடந்தது.. நண்பனை கைவிட்ட கேப்டன் ரோஹித்..! சீனியர் வீரரின் கிரிக்கெட் கெரியர் ஓவர்
 

தான் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட விரக்தியில் இருக்கும் ரமீஸ் ராஜா, இந்திய அணியை பற்றி பேசி மனதை தேற்றிக்கொள்கிறார். இந்திய அணி தேர்வு விமர்சனங்களை எதிர்கொண்டதன் விளைவாக, தேர்வுக்குழுவை கலைத்துவிட்டு புதிய தேர்வாளர்களை நியமிக்கவுள்ளது பிசிசிஐ. 

இந்நிலையில், பாகிஸ்தான் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஃபைனலுக்கு முன்னேறியதை ஜீரணிக்க முடியாமல் இந்திய அணியின் தேர்வுக்குழுவை பிசிசிஐ கலைத்ததாக ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
 

இதுகுறித்து பேசிய ரமீஸ் ராஜா, பாகிஸ்தான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியிருக்கிறது. ஆசிய கோப்பை ஃபைனலில் ஆடினோம். இந்திய அணி முன்பே தொடரைவிட்டு வெளியேறியது. பாகிஸ்தான் அணி இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்டதை ஜீரணிக்க முடியாமல் தான் இந்திய அணியின் தேர்வாளர்களை பிசிசிஐ நீக்கியதாக ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

ICC WTC புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு பின்தங்கிய தென்னாப்பிரிக்கா..! இந்தியாவின் ஃபைனல் வாய்ப்பு வலுவானது

பாகிஸ்தானுடன் ஒப்பிடும் நிலையில் இந்திய கிரிக்கெட் இல்லை என்ற எதார்த்தத்தை ஏற்க பாகிஸ்தான் மறுக்கிறது. இந்திய அணி அதன் வளர்ச்சியில் கவனம் செலுத்தி மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் செய்கிறதே தவிர, பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு இதையெல்லாம் செய்யவில்லை. பாகிஸ்தானைவிட பலமடங்கு சிறந்த நிலையில் இந்திய அணி உள்ளது என்பதுதான் நிதர்சனம்.

click me!