கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை ஆகிய 2 பெரிய ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து அதிருப்தியளித்தது. எனவே இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கு வலுவான அணியுடன் சென்று அதிரடியான அணுகுமுறையை கையாண்டு கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது இந்திய அணி.
அந்த வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிடவில்லை. ஆனால் பிசிசிஐ ஷார்ட்லிஸ்ட் செய்த வீரர்கள் பட்டியலை உத்தேசமாக பார்ப்போம். கேப்டன் ரோஹித் சர்மாவின் புதிய ஓபனிங் பார்ட்னர் இஷான் கிஷானாகத்தான் இருப்பார். சீனியர் தொடக்க வீரர் ஷிகர் தவான் கண்டிப்பாக இந்த பட்டியலில் இருக்கமாட்டார். வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்து ஒருநாள் அணியில் தனக்கான இடத்தை நிரந்தரமாக இஷான் கிஷன் பிடித்துவிட்டார். ஷுப்மன் கில் மாற்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பார்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ்.
விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன்கள் - ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன்.
ஸ்பின்னர்கள் - ரவீந்திர ஜடேஜா(ஆல்ரவுண்டர்), வாஷிங்டன் சுந்தர் (ஆல்ரவுண்டர்), யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.
பிசிசிஐ ஷார்ட்லிஸ்ட் செய்த உத்தேச 20 வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.