பிசிசிஐ ஆய்வுக்கூட்டம் இன்று மும்பையில் நடந்தது.பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண், தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
2023 ஒருநாள் உலக கோப்பைக்கு 20 வீரர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தான் இந்த ஆண்டு நடக்கும் 35 ஒருநாள் போட்டிகளில் சுழற்சி முறையில் இறக்கப்படுவார்கள். யோ யோ டெஸ்ட் மீண்டும் கொண்டுவரப்படுகிறது. வீரர்களுக்கு அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படும் நிலையில், எலும்பு பலத்தை அறிய டெக்ஸா என்ற டெஸ்ட்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
மேலும் இளம் வீரர்களுக்கு முக்கியமான கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. ரஞ்சி, விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி, துலீப் டிராபி ஆகிய உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் வீரர்களே இந்திய அணியில் இடம்பிடிக்க கஷ்டப்படும் நிலையில், ஐபிஎல்லில் ஒரு சீசனில் சில போட்டிகளில் சிறப்பாக ஆடி கவனத்தை ஈர்த்த சில வீரர்கள் நேரடியாக இந்திய அணியில் இடம்பெற்றனர். இது கடும் விமர்சனத்துக்குள்ளாகிவந்தது.
அவரை மாதிரி டேலண்ட் தேடினாலும் கிடைக்காது.. ஒதுக்காமல் டீம்ல எடுங்க.! டிராவிட்டுக்கு கம்பீர் அறிவுரை
இந்நிலையில், இளம் வீரர்கள் இனிமேல் உள்நாட்டு போட்டிகளில் ஆடாமல் இந்திய அணியில் இடம்பெறமுடியாது. ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி டிராபி ஆகிய உள்நாட்டு போட்டிகளில் ஆடி, அதிலும் சிறப்பாக ஆடினால் தான் இனிமேல் இந்திய அணியில் இடம்பெற முடியும். உள்நாட்டு போட்டிகளில் ஆடாமல் இந்திய அணியில் இடம்பெற முடியாது என்று பிசிசிஐ கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.