பிசிசிஐ ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கியமான 3 விவகாரங்கள்

First Published | Jan 1, 2023, 4:56 PM IST

பிசிசிஐ ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட 3 விஷயங்கள் என்னென்னவென்று பார்ப்போம்.

இந்திய அணி ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய 2 பெரிய ஐசிசி தொடர்களில் அடுத்தடுத்து தோல்வியடைந்து அதிருப்தியளித்தது. இந்திய அணி தேர்வு கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், சரியான வீரர்களை தேர்வு செய்து வலுவான காம்பினேஷனை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பைகளில் தோற்ற இந்திய அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கு தீவிரமாக தயாராகிவருகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பும்ரா, ஜடேஜா ஆகியோர் காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 

அவரை மாதிரி டேலண்ட் தேடினாலும் கிடைக்காது.. ஒதுக்காமல் டீம்ல எடுங்க.! டிராவிட்டுக்கு கம்பீர் அறிவுரை
 

Tap to resize

பும்ரா, ஜடேஜா மட்டுமல்லாது தீபக் சாஹரும் அடிக்கடி காயமடைகிறார். முக்கியமான ஐசிசி தொடர்களில் நட்சத்திர வீரர்கள் காயமடைவது அணிக்கு பெரும் பாதிப்பாக அமைகிறது. எனவே வீரர்களின் ஃபிட்னெஸ் பராமரிப்பு, பணிச்சுமை மேலாண்மை, அணி தேர்வு ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்துவது முக்கியம்.

இந்நிலையில், இந்திய அணியின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக பிசிசிஐ ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது. பிசிசிஐ ஆய்வுக்கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் சர்மா, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லக்‌ஷ்மண், தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஒருநாள் உலக கோப்பையில் ரோஹித்துடன் யார் ஓபனிங்கில் இறங்கவேண்டும்..? கௌதம் கம்பீர் அதிரடி

இந்த ஆய்வுக்கூட்டத்தில் வீரர்கள் கிடைக்கும் தன்மை, பணிச்சுமை மேலாண்மை, ஃபிட்னெஸ் பாராமீட்டர் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் 2023 ஒருநாள் உலக கோப்பைக்கு தயாராவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. யோ யோ டெஸ்ட், டெக்ஸா குறித்தும் பிசிசிஐ ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Latest Videos

click me!