இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 2-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் 2வது இடத்தை வலுவாக தக்கவைத்துள்ளது இந்திய அணி. 3வது டெஸ்ட்டிலும் வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேறிவிடும்.
2வது டெஸ்ட் போட்டி முடிந்ததும், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் குடும்ப விவகாரம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார். அவர் 3வது டெஸ்ட்டுக்கு முன் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது தாய்க்கு உடம்பு சரியில்லை என்பதால் அவர் இந்தியாவிற்கு திரும்புவதில்லை என்று முடிவு எடுத்துள்ளார். அவர் தாய்க்கு உடம்பு சரியில்லாததால் தான் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவிற்கு சென்றார். அவரது உடல்நிலையில் இன்னும் முன்னேற்றம் இல்லாததால் கம்மின்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.
IPL 2023: டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு கேப்டன்கள் நியமனம்! 2 பேருமே வெளிநாட்டு கேப்டன்கள்
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். 2014லிருந்து 2018 வரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ள ஸ்டீவ் ஸ்மித், 2018 தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்றார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது.