தோனி மாதிரியே ரன் அவுட்டான ஹர்மன்ப்ரீத் கவுர்!

Published : Feb 24, 2023, 11:55 AM IST

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட்டான மாதிரியே மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ரன் அவுட் செய்யப்பட்டுள்ளார்.

PREV
113
தோனி மாதிரியே ரன் அவுட்டான ஹர்மன்ப்ரீத் கவுர்!
எம் எஸ் தோனி ரன் அவுட் - ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்

தென் ஆப்பிரிக்காவில் நடந்து வந்த மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் உள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதைத் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

213
எம் எஸ் தோனி ரன் அவுட் - ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்

இந்திய மகளிர் அணி:

ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யஸ்டிகா பாட்டியா, ஸ்னே ராணா, ஷிகா பாண்டே, ராதா யாதவ், ரேணுகா சிங்.
 

313
எம் எஸ் தோனி ரன் அவுட் - ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

அலைஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி, டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஜெஸ் ஜோனாசென், மேகான் ஸ்கட், டார்ஸி பிரௌன்.
 

413
எம் எஸ் தோனி ரன் அவுட் - ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்

அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவர்களில் 52 ரன்கள் குவித்தது. அலைஸா ஹீலி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட்டிங் ஆடிய பெத் மூனி அரைசதம் அடித்தார். பெத் மூனி 37 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கேப்டன் லானிங் நிதானமாக ஆடி 34 பந்தில் 49 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். ஆஷ்லே கார்ட்னெர் 18 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் அடிக்க, 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு  172 ரன்கள் குவித்தது.

513
எம் எஸ் தோனி ரன் அவுட் - ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்

இதைத் தொடர்ந்து 173 ரன்களை கடின இலக்காக கொண்டு இந்திய மகளிர் அணி ஆடியது. இதில், தொடக்க வீராங்கனைகள் ஷஃபாலி வெர்மா (9) மற்றும் ஸ்மிருதி மந்தனா (2) இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இவர்களைத் தொடர்ந்து களத்திற்கு வந்த யஸ்டிகா பாட்டியா  4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமாம் ரோட்ரிக்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினர்.
 

613
எம் எஸ் தோனி ரன் அவுட் - ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்

ஜெமிமா 24 பந்துகளில் 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 34 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 52 ரன்கள் அடித்து அவரும் தனது கடமையை செய்து முடிக்காமல் ரன் அவுட்டானார். இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஹர்மன்ப்ரீத் கவுருக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லப்படுகிறது.

713
எம் எஸ் தோனி ரன் அவுட் - ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்

ஹர்மன்ப்ரீத் கவுர் 2ஆவது ரன்னுக்கு ஓடி வந்து கிரீஸை நெருங்கிய போது பேட் புல் தரையில் மாட்டிக் கொண்டது. இதனால், ரன் அவுட் செய்யப்பட்டார். ஒருவேளை ஹர்மன்ப்ரீத் கவுர் ரன் அவுட்டாகாமல் இருந்திருந்தால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றிருக்கும். இதற்கு முன்னதாக எம் எஸ் தோனியும் இதே போன்ற ஒரு முறையில் தான் ரன் அவுட் செய்யப்பட்டுள்ளார்.
 

813
எம் எஸ் தோனி ரன் அவுட் - ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்

அதன்பின்னர் ரிச்சா கோஷ் (14), தீப்தி ஷர்மா (20), ஸ்னே ராணா (11) ஆகியோர் சிறு சிறு பங்களிப்பு செய்து கடைசிவரை போராடியும் 20 ஓவரில் இந்திய மகளிர் அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 

913
எம் எஸ் தோனி ரன் அவுட் - ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்

இதன் மூலம் தொடரை விட்டு இந்திய மகளிர் அணி டி20 உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேறியது. இதற்கு முன்னதாக ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரையும் இழந்தது. 20202 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையையும் இழந்தது. 2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பையையும் இழந்தது. தற்போது டி20 உலகக் கோப்பை தொடரையும் இழந்துள்ளது.

1013
எம் எஸ் தோனி ரன் அவுட் - ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தோனி ரன் அவுட் செய்யப்பட்டதும், தற்போது ஹர்மன்ப்ரீத் கவுர் ரன் அவுட் செய்யப்பட்டதும் ஒரே மாதிரியாக இருப்பதாக ரசிகர்கள் டுவிட்டரில் ஒப்பட்டு வருகின்றனர்.
 

1113
எம் எஸ் தோனி ரன் அவுட் - ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் ஆடி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்தது. 240 ரன்கள் எடுத்தால் வெற்றி இலகக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து தத்தளித்தது. அப்போது தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் தங்களது அணியை விக்கெட் இழப்பிலிருந்து மீட்டனர்.
 

1213

ಮಾರ್ಟಿನ್ ಗಪ್ಟಿಲ್ ಚುರುಕಿನ ಕ್ಷೇತ್ರ ರಕ್ಷಣೆಯಿಂದಾಗಿ ಧೋನಿ ರನೌಟ್ ಆಗಿದ್ದರು. ಇದರೊಂದಿಗೆ ಭಾರತದ ಫೈನಲ್ ಪ್ರವೇಶದ ಕನಸು ಕಮರಿಹೋಯಿತು.

தோனி 72 பந்துகளில் 50 ரன்களும், ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்களும் எடுத்து 7 ஆவது விக்கெட்டுக்கு 208 ரன்கள் சேர்த்தனர். போட்டியின் 49ஆவது ஓவரில் இரண்டு ரன்கள் எடுக்க முயற்சித்த தோனி ரன் அவுட் முறையில் நடையைக் கட்டினார். 

1313
எம் எஸ் தோனி ரன் அவுட் - ஹர்மன்ப்ரீத் ரன் அவுட்

48.3 வது ஓவரில் இந்திய அணி 216 ரன்கள் எடுத்திருந்தது. தோனி மட்டும் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 2019 உலகக் கோப்பையில் வெற்றி பெற்றிருக்கும். 
 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories