BAN Vs PAK: முதல் டெஸ்டில் டக் அவுட்; மோசமான பாஃர்மால் திணறும் பாபர் - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

First Published | Aug 21, 2024, 7:44 PM IST

வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆஸம் டக் அவுட்டான நிலையில், அவரது மோசமான பாஃர்ம் தொடர்வதால் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

2023ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் ஆஸம் சொல்லிக் கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் இன்னும் பார்முக்கு திரும்பவில்லை.

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், வெறும் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட பாபர் ஆஸம் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

Tap to resize

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியை மிக மோசமாக தொடங்கியது பாகிஸ்தான் அணி. 8.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பாகிஸ்தான் அணி. 

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அப்துல்லா சஃபிக் மற்றும் கேப்டன் சன் மசூத் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு பாபர் ஆஸமும் ஆட்டமிழந்தார்.

ஷாரிஃபுல் இஸ்லாம் வீசிய முதல் பந்தை பாதுகாப்பாக விளையாடினார் பாபர் ஆஸம். அடுத்த பந்து அவரது மட்டையின் விளிம்பில் பட்டு லெக் சைட்டை நோக்கி சென்றது. அருமையான கேட்ச் பிடித்தார் லிட்டன் தாஸ்.

2023 ஜனவரி முதல் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 253 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் பாபர் ஆஸம். அவரது பேட்டிங் சராசரி 21.08 மட்டுமே. 

2023 டிசம்பரில் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 41 ரன்கள் எடுத்தார் பாபர் ஆஸம். இதுவே கடந்த ஒன்றரை ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும்.

பாபர் ஆஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணியால் டி20 உலகக் கோப்பையின் நாக் அவுட் சுற்றுக்குள் நுழைய முடியவில்லை. மோசமான செயல்பாட்டிற்காக பாபர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

சன் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் டெஸ்ட் அணியால் சமீப காலமாக வெற்றிகளைப் பெற முடியவில்லை. பாபர் ஆஸம் பார்மில் இல்லாதது அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக டக் அவுட் ஆனார் பாபர் ஆஸம். டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தமாக எட்டாவது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார்.

சமூக வலைதளங்களில் பலர் பாபர் ஆஸமை 'ஜிம்பாப்வே' என்று கிண்டல் செய்கிறார்கள். புதன்கிழமை வங்கதேச அணிக்கு எதிராக பாபர் விரைவில் ஆட்டமிழந்த பிறகு மீண்டும் கேலிக்குள்ளானார்.

இதுவரை ஒருமுறை கூட ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணியால் தகுதி பெற முடியவில்லை. இந்த முறையும் பாகிஸ்தான் அணி பின்தங்கியுள்ளது. இருப்பினும், இந்த முறை இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்ற இலக்கை அவர்கள் கொண்டுள்ளனர்.

Latest Videos

click me!