ஆசிய கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹர்திக் பாண்டியா முகமது ரிஸ்வான், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா ஆகிய மூவரையும் வீழ்த்தினார். முகமது ரிஸ்வான் மற்றும் குஷ்தில் ஷா ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து பாபர் அசாமிடம் கேள்வியெழுப்பிய நிருபர், ஹர்திக் பாண்டியா மாதிரியான வீரர் ஃபிட்டாக இருந்தால் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறார். அது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டதா? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பாபர் அசாம், பாண்டியா அபாரமாக பந்துவீசினார். பேட்டிங்கிலும் அசத்தினார். அவர் சிறந்த ஆல்ரவுண்டர். அவர் போட்டியை முடித்தவிதம் அபாரமாக இருந்தது என்று பாபர் அசாம் புகழாரம் சூட்டினார்.