ஆசிய கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி துபாயில் நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
148 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியில் ரோஹித் (12), ராகுல்(0) ஆகிய இருவரும் சோபிக்கவில்லை. விராட் கோலி மற்றும் ஜடேஜா தலா 35 ரன்கள் அடித்தனர். ஹர்திக் பாண்டியா 17 பந்தில் 33 ரன்கள் அடித்து போட்டியை முடித்து கொடுத்தார். 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 2 அணிகளுமே படுமோசமாக விளையாடியதாக அக்தர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஷோயப் அக்தர், இரு அணிகளுமே படுமட்டமாக ஆடின. இந்தியா - பாகிஸ்தான் இரு அணிகளுமே ஜெயிப்பதற்காக ஆடவில்லை. தோற்பதற்காகத்தான் ஆடின. இரு கேப்டன்களும் எடுத்த சில முடிவுகள் எனக்கு அதிர்ச்சியும் வியப்பும் அளித்தன. ரோஹித் - பாபர் அசாம் இருவருமே யார் மோசமான கேப்டன்சி செய்வது என்பதில் போட்டி போட்டனர்.
இதையும் படிங்க - ஷுப்மன் கில் - சாரா அலி கான் துபாயில் டேட்டிங்! சாரா டெண்டுல்கர் என்ன ஆனார்? வைரல் வீடியோ
ரோஹித் சர்மா ரிஷப் பண்ட்டை உட்காரவைத்தார். பாபர் அசாம் இஃப்டிகார் அகமதுவை 4ம் வரிசையில் இறக்கிவிட்டார். சூர்யகுமார் யாதவுக்கு மேல் ஜடேஜாவை இறக்கிவிட்டார் ரோஹித். அவர் சர் ஜடேஜா; சர் பிராட்மேன் அல்ல. அவர் பந்துக்கு நிகரான ரன்னே அடித்தார். பாகிஸ்தானும் அதே தவறைத்தான் செய்தது. ஆசிஃப் அலிக்கு முன்னால் ஷதாப் கானை இறக்கியது. எனவே இரு அணிகளுமே தோற்பதற்காகத்தான் ஆடின. ஒட்டுமொத்தமாக அதுவொரு மோசமான போட்டி என்று ஷோயப் அக்தர் விமர்சித்துள்ளார்.