டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! கடைசி நேரத்தில் கழட்டிவிடப்படும் சீனியர் வீரர்

First Published | Aug 29, 2022, 2:14 PM IST

டி20  உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை தீப்தாஸ் குப்தா தேர்வு செய்துள்ளார்.
 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 27ம் தேதி தொடங்கி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
 

நேற்று துபாயில் நடந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 11ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், டி20 உலக கோப்பை அக்டோபர் - நவம்பரில் நடக்கிறது.
 

Tap to resize

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை தீப்தாஸ் குப்தா தேர்வு செய்துள்ளார். முதல் 5 பேட்டிங் ஆர்டர் உறுதி. ரோஹித், ராகுல், கோலி, சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா ஆகிய ஐவரும் ஆடுவது உறுதி.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை: ஜடேஜா - ஹர்திக் பாண்டியா பொறுப்பான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
 

விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டை தேர்வு செய்துள்ளார் தீப்தாஸ் குப்தா. ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட்டை உட்காரவைத்துவிட்டு தினேஷ் கார்த்திக்குடன் ஆடியது இந்திய அணி. எனவே டி20 கிரிக்கெட் உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக்கைத்தான் இந்திய அணி விக்கெட் கீப்பராக எடுத்து ஃபினிஷர் ரோலை ஒப்படைக்க திட்டமிட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.
 

இனிமேல் தினேஷ் கார்த்திக் அவரது இடத்தை அவராகவே சொதப்பி இழந்துகொண்டால் தான் உண்டு. ஆனால் ரிஷப் பண்ட்டை விட டி20 அணியில் தினேஷ் கார்த்திற்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதற்கு காரணம், டாப்   5 பேட்டிங் ஆர்டர் திடமாக இருப்பதால், அங்கு ரிஷப்பிற்கு வேலையில்லை. ஃபினிஷர் ரோலை தினேஷ் கார்த்திக் நன்றாக செய்கிறார். எனவே அவர் ஃபினிஷராக இருக்கட்டும் என இந்திய அணி அவர்மீது நம்பிக்கை வைத்து எடுத்துள்ளது.
 

இந்நிலையில், தீப்தாஸ் குப்தா தினேஷ் கார்த்திக்கை விட ரிஷப் பண்ட்டிற்குத்தான் முன்னுரிமை கொடுத்திருக்கிறார். 

இதையு ம் படிங்க - ரோஹித் - டிராவிட்டின் ஸ்மார்ட்டான மூவ் இதுதான்! உலகின் தலைசிறந்த பவுலருக்கு கம்பேக் வாய்ப்பு- சக்லைன் முஷ்டாக்
 

ஸ்பின்னர்களாக ஜடேஜா மற்றும் சாஹலையும், ஃபாஸ்ட்பவுலர்களாக சீனியர்கள் புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகியோருடன் இளம் பவுலர் அர்ஷ்தீப் சிங்கையும் தேர்வு செய்துள்ளார் தீப்தாஸ் குப்தா.

டி20 உலக கோப்பைக்கு தீப்தாஸ் குப்தா தேர்வு செய்த இந்திய அணியின் ஆடும் லெவன்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
 

Latest Videos

click me!