ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி நாளை துபாயில் நடக்கிறது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.
இதுகுறித்து பேசிய டேனிஷ் கனேரியா, கேஎல் ராகுல் பெரிய காயத்திலிருந்து மீண்டு வந்து ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஆடினார். அதைத்தொடர்ந்து இப்போது ஆசிய கோப்பை தொடரில் ஆடவுள்ளார். இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மாதிரியான சிறப்பான வீரர்களும் உள்ளனர். சாம்சன் நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறார். சஞ்சு சாம்சன் மிகச்சிறந்த வீரர். அவர் விளையாடுவதை பார்க்க அருமையாக இருக்கும். அவருக்கு இந்திய அணியில் தொடர் வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை.
சாம்சன் அணியில் எடுக்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கிறது. அதற்கு ராகுல் டிராவிட் தான் காரணம். சஞ்சு சாம்சனின் திறமை பற்றி ராகுல் டிராவிட்டுக்கு நன்றாக தெரியும். அதனால் தான் சஞ்சு சாம்சனுக்கு இப்போது வாய்ப்பு கிடைக்கிறது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.