இந்திய வரைபடம் சர்ச்சை – ஜம்மு காஷ்மீர், லடாக்கை குறிப்பிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய நியூசிலாந்து!

First Published | Oct 22, 2024, 12:29 PM IST

New Zealand Cricket Used India Map Wrongly: நியூசிலாந்து கிரிக்கெட் (NZC) சமீபத்திய சமூக ஊடகப் பதிவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் எல்லைகளைத் தவறாகச் சித்தரிக்கும் இந்திய வரைபடத்தைக் காட்டியதால் இந்திய ரசிகர்களிடமிருந்து கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

New Zealand Cricket Used India Map Wrongly

New Zealand Used India Map Wrongly: இந்திய வரைபடத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் சர்ச்சையான நிலையில் அந்த பதிவை உடனடியாகவே நீக்கியுள்ளது. எனினும், இது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி சர்ச்சையாகி வருகிறது.

India vs New Zealand 2nd Test

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது.

Latest Videos


India vs New Zealand 2nd Test

வரும் 24 ஆம் தேதி புனேவில் 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது எக்ஸ் பக்கத்தில் இந்திய வரைபடத்தை பதிவிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்தும் மைதானங்கள் பற்றி குறிப்பிட விரும்பியிருக்கிறது. அதாவது, பெங்களூரு, புனே மற்றும் மும்பையில் 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.

IND vs NZ 2nd Test. Pune Test

இந்த மைதானங்களுக்கு பதிலாக நியூசிலாந்து தவறுதலாக இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் காட்டப்பட்டுள்ளன. இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். அதோடு, உடனடியாக நியூசிலாந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் விமர்சித்தனர்.

New Zealand Used India Map Wrongly

இதையடுத்து நியூசிலாந்து வாரியம் உடனடியாக அந்த பதிவை தங்களது எக்ஸ் பக்கத்திலிருந்து நீக்கியது. ஆனால் அதற்குள் கிவிஸ் வாரியம் செய்த தவறு சமூக வலைதளங்களில் வைரலானது. 2ஆவது டெஸ் போட்டி புனேயில் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டி குறித்து முக்கியமான தகவலை வெளியிட நியூசிலாந்து இந்திய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. ஆனால், அதில் தவறான வரைபடத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அதி புத்திசாலியாக நடந்து கொள்கிறேன் என்ற பெயரில் இப்படி முட்டாள் தனமாக நடந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

IND vs NZ Pune Test

இது குறித்து பிசிசிஐ எந்த கருத்தும் இதுவரையில் பதிவிடவில்லை. தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 24 ஆம் தேதி வியாழக்கிழமை புனேயில் தொடங்குகிறது. இதுவரையில் நியூசிலாந்திற்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 1 ஆம் தேதி நடைபெறுகிறது.

click me!