Ind vs ENG Test: தலைகீழாக தான் குதிப்பேன்! விக்கெட்டை எதிரணிக்கு பரிசளித்த சுப்மன் கில்! விளாசும் ரசிகர்கள்!

Published : Jul 31, 2025, 10:31 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்டில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். அவரை ரசிகர்கள் விளாசித் தள்ளி வருகின்றனர்.

PREV
14
Fans Criticizing Shubman Gill For Unwanted Run Out

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி ஓவலில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஆலி போப் தங்கள் அணி முதலில் பந்துவீசும் என தெரிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அட்கின்சனின் பந்தில் ஜெய்ஸ்வால் 2 ரன்னில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

24
சுப்மன் கில் தேவையில்லாமல் ரன் அவுட்

பின்னர் கே.எல்.ராகுல், சாய் சுதர்சன் ஜோடி 15 ஓவர்கள் வரை நிலைத்து நின்றது. இருவரும் 28 ரன்கள் சேர்த்தனர். ஆனால் கே.எல்.ராகுல் 14 ரன்னில் வோக்ஸ் பந்தில் போல்டானார். அப்போது இந்திய அணி 38/2 என தடுமாறியது. பின்பு களமிறங்கிய சுப்மன் கில் சிறப்பான தொடக்கம் அளித்தார். 35 பந்தில் 4 பவுண்டரியுடன் 21 ரன்கள் அடித்த அவர் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார்.

34
விக்கெட்டை எதிரணிக்கு பரிசளித்து விட்டார்

அதாவது குஸ் அட்கின்சன் வீசிய ஒரு பந்தை ஷார்ட் கவரிடம் தட்டிவிட்டு, ஒரு ரன் எடுக்க முயற்சித்தபோது பந்தை லாவகமாகப் பிடித்த அட்கின்சன், விரைவாக ஸ்டம்பை நோக்கி பந்தை வீச சுப்மன் கில் ரன் அவுட் ஆனார். பவுலர்களுக்கு நல்ல ஸ்விங் மற்றும் பவுன்ஸ் இந்த சவாலான பிட்ச்சில் சுப்மன் கில் தனது விக்கெட்டை எதிரணிக்கு பரிசளித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

ரசிகர்கள் கடும் கோபம்

அணிக்கு கேப்டனாக இருக்கும் கில்லின் இந்த பொறுப்பற்ற ரன் அவுட் ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ''டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரர் ரன் அவுட்டாவது தற்கொலைக்கு சமமானது. சாய் சுதர்சன் ஓட வேண்டாம் என்று சைகை செய்தும், கில் அதை கவனிக்காமல் ஓடினார். இது கவனக்குறைவு மட்டுமின்றி அவரின் பொறுப்பற்ற ஆட்டத்தை காட்டுகிறது'' என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

44
இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு

''இந்தியா 2-1 என்ற கணக்கில் பின்தங்கியிருக்கும் நிலையில், தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இப்படி ஒரு முக்கிய தருணத்தில் கேப்ய்டன் சுப்மன் கில்லின் ரன் அவுட் அணியின் மன உறுதியை பாதிக்கும்'' என்று ஒரு சில ரசிகர்கள் கூறியுள்ளனர். சுப்மன் கில்லின் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. கில் அவுட்டானவுடன் நன்றாக விளையாடிய சாய் சுதர்சன் (38 ரன்), ரவீந்திர ஜடேஜா (9) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 132/5 என தடுமாறி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories