டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 43ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார்.
மும்பை அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஜெரால்டு கோட்ஸீ நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக லூக் உட் அணியில் இடம் பெற்றுள்ளார். மேலும், டெல்லி அணியிலும் சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. பிரித்வி ஷா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக குமார் குஷாக்ரா அணியில் இடம் பெற்றுள்ளார்.
57
Delhi Capitals vs Mumbai Indians, IPL 2024
டெல்லி கேபிடல்ஸ் கடைசியாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்ல் 224 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய குஜராத் 220 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
67
DC vs MI, IPL 2024
இதற்கு முன்னதாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 20 ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில், முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 234/5 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் 205/8 ரன்கள் எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
77
Delhi Capitals vs Mumbai Indians
இரு அணிகளும் இதற்கு முன்னதாக மோதிய 34 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 19 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ் 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதற்கு முன்னதாக, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 11 போட்டிகளில் மும்பை 6 போட்டியிலும், டெல்லி 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 79 போட்டிகளில் டெல்லி 33 போட்டியில் வெற்றி பெற்று 44 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஒரு போட்டி டிரா செய்யப்பட்டுள்ளது. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது.