டி20 உலகக் கோப்பைக்கு அபிஷேக் சர்மா ஏன் ரெடி இல்லை – யுவராஜ் சிங்கம் விளக்கம்!

First Published | Apr 27, 2024, 1:33 PM IST

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மா சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்பதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

IPIL 2024

ஐபிஎல் 2024 தொடரைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், கனடா, ஓமன், நமீபியா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாள், பப்புவா நியூ கினியா, அயர்லாந்து, நியூசிலாந்து, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

Abhishek Sharma

இந்த தொடருக்கான இந்திய அணி குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு, யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்பது குறித்தும் 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்து வருகின்றனர். அதில், அபிஷேக் சர்மாவும் இடம் பெறுவார் என்பது குறித்தும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், அவர் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.

Tap to resize

Yuvraj Singh

இது குறித்து யுவராஜ் சிங் கூறியிருப்பதாவது: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அபிஷேக் சர்மா அதிக ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடியிருந்தாலும், டி20 உலகக் கோப்பைக்கு தயாராக இருக்க மாட்டார். ஒரு இடது கை பேட்ஸ்மேனாக தனது ஆரம்ப வெற்றியை பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும்.

T20 Cricket World Cup 2024

உலகக் கோப்பை அணிக்கு அனுபவம் தேவை. இருப்பினும், அவர் நன்றாக விளையாடி வரும் நிலையில், எதிர்காலத்தில் இந்திய அணியின் தேர்வில் இடம் பெறுவார். உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு அபிஷேக் சர்மா தன்னை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Latest Videos

click me!