MS Dhoni : ஒரே ஒரு தோல்வி - கோபத்தில் எம்.எஸ். தோனியின் வீட்டை அடித்து நொறுக்கிய ரசிகர்கள்!

First Published | Aug 26, 2024, 6:41 PM IST

2007 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணியிடம் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ரசிகர்கள் கோபத்தில் தோனியின் ராஞ்சி வீட்டை கல்லால் எறிந்து தீ வைத்தனர்.

MS Dhoni

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனியின் ராஞ்சி வீட்டை கல்லால் எரிந்தும், தீ வைத்தும் கொளுத்தும் அளவிற்கு ரசிகர்கள் கோபத்தின் உச்சத்திற்கு சென்றனர்.

IND vs BAN, ODI World Cup 2007

சவுரவ் கங்குலி, வீரேந்திர சேவாக், ராபின் உத்தப்பா, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், யுவராஜ் சிங், எம்.எஸ்.தோனி என்று ஏராளமான பேட்ஸ்மேன்கள் இருந்தும் இந்தியா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. 2007 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வெஸ்ட் இண்டீஸ் நடத்தியது.

Latest Videos


MS Dhoni

இந்த தொடரின் 8ஆவது போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இது இந்திய அணியின் முதல் போட்டி. இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் தான் கேப்டனாக இருந்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே குவித்தது.

MS Dhoni House

இந்திய அணி சார்பில் சவுரவ் கங்குலி 66 ரன்களும், யுவராஜ் சிங் 47 ரன்களும் எடுத்தனர். சேவாக் 2, உத்தப்பா 9, சச்சின் 7, தோனி 0, ஹர்பஜன் சிங், 0, அஜித் அகர்கர் 0, ஜாகீர் கான் 15, முனாப் படேல் 15 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணியைப் பொறுத்த வரையில் முஷ்ரபே மோர்டஷா 4 விக்கெட்டுகளும், அப்துல் ரசாக் மற்றும் முகமது ரஃபீக் தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

IND vs BAN, ODI World Cup 2007

பின்னர், 192 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு வங்கதேச அணி விளையாடி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து போராடி வென்றது. தமீம் இக்பால் 51 ரன்களும், முஷ்தாபிகுர் ரஹீம் 56 ரன்களும், ஷாகிப் அல் ஹசன் 53 ரன்களும் எடுத்தனர். அப்போது சிறிய அணியான வங்கதேச அணியிடம் இந்தியா உலகக் கோப்பை போட்டியில் தோற்றது ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

MS Dhoni House

இந்தியாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழந்தனர். ஆனால், இந்திய ரசிகர்கள் கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்றனர். இதன் விளைவாக அப்போது தோனி புதிதாக ராஞ்சியில் வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டின் முன்பு சென்ற ரசிகர்கள் கல்லால் அடித்து நொறுக்கினார்கள். அதோடு, தோனி போன்று உருவ பொம்மையை செய்து தீ வைத்தும் கொளுத்தினார்கள்.

MS Dhoni

வீட்டை அடித்து நொறுக்கிய இந்திய ரசிகர்கள் தோனியை தலைமீது தூக்கி வைத்து கொண்டாடினர். அப்படி ஒரு சம்பவம் தான் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நடைபெற்றது. இந்த தொடருக்கு தோனி தான் கேப்டனாக இருந்தார். அவரது தலைமையிலான இந்திய அணி இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. இதன் காரணமாக தோனியை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

MS Dhoni - 2007 ODI World Cup

என்னதான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு பெற்றிருந்தாலும் இன்னமும் ஐபிஎல் தொடர்களில் விளையாடி வருகிறார். தோனிக்காகவே ஐபிஎல் தொடரை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசிக்கின்றனர். இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால், தோனி எப்போது களத்திற்கு வருவார் என்று ஏங்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள். மைதானத்திற்குள் அத்துமீறி சென்று அவரது காலில் விழுந்தும் ரசிகர்கள் வணங்குகிறார்கள்.

click me!