Suryakumar Yadav
சூர்யகுமார் யாதவ் இந்திய அணியில் டி20 கிரிக்கெட்டில் நட்சத்திர வீரர். டி20 கிரிக்கெட்டின் ராஜா என்றும் கூட இவரை அழைக்கலாம். தற்போது டி20 தரவரிசையில் நம்பர் ஒன் வீரராக தொடர்கிறார். பந்துவீச்சாளர்களுக்கு மைதானத்தில் நட்சத்திரங்களை காட்டும் இந்த நட்சத்திர கிரிக்கெட் வீரரைப் பற்றி தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
IPL 2025 -Suryakumar Yadav
இவர் இந்தியன் பிரீமியர் லீக் 2025 (ஐபிஎல் 2025) தொடருக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மோசமான செய்தி என்றுதான் சொல்ல வேண்டும். சூர்யகுமார் யாதவ் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் விளையாடி வருகிறார்.
Suryakumar Yadav - IPL 2025
இருப்பினும், வரவிருக்கும் சீசனில் அவர் மும்பையை விட்டு வெளியேறி மற்றொரு அணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக ஐபிஎல் 2024 சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏற்கனவே மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Shreyas Iyer
ஷ்ரேயாஸ் ஐயர் நிலை என்ன?
ஐபிஎல் 2024ல் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டிராபியை வென்றது. தற்போது இந்த சாம்பியன் அணி வரும் சீசனில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரை மற்றொரு வீரருடன் மாற்ற திட்டமிட்டுள்ளதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊடக செய்திகளின்படி, ஐபிஎல் 2025ல் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக புதிய கேப்டன் நியமிக்கப்படுவார். அணி விரைவில் இதை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேகேஆர் ஏற்கனவே இது தொடர்பாக சூர்யகுமார் யாதவை அணுகி அவருக்கு கேப்டன்சி பதவியை வழங்கியதாகவும் பல ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Suryakumar Yadav and Shreyas Iyer
கேகேஆர் அணியில் இருந்த சூர்யா…
சூர்யகுமார் யாதவ் கடந்த சில ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால், அதற்கு முன் அவர் கேகேஆர் அணியிலும் இருந்தார். அப்போது அவர் பெரிய வீரர் இல்லை.. ஆனால், இப்போது டி20யில் சூர்யகுமார் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர். தற்போது அவரது அபாரமான ஆட்டத்தால் பிசிசிஐ சூர்யகுமார் யாதவுக்கு இந்திய டி20 அணியின் தலைமைப் பொறுப்பையும் ஒப்படைத்துள்ளது. சூர்யா தலைமையில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு இலங்கையில் டி20 தொடரை வென்றது.
Mumbai Indians, Suryakumar Yadav
ஐபிஎல் விதி மாற்றங்களால்..
ஐபிஎல் 2025க்கு முன்னதாக நடைபெறும் மெகா ஏலத்தில் 6 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அணிகளை பிசிசிஐ அனுமதிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முந்தைய விதிப்படி, அணிகள் 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் மும்பை அணி சூர்யகுமார் யாதவை விட்டுக்கொடுக்கும் வாய்ப்பு இல்லை.
Suryakumar Yadav
சூர்யாவிற்காக கேகேஆர் மும்பையுடன் வர்த்தகம் செய்யலாம். அதே நேரத்தில், மும்பை இந்தியன்ஸின் முடிவுகளில் சூர்யகுமார் யாதவ் மகிழ்ச்சியடையவில்லை என்றும், மும்பை அணியும் அவரை விடுவிக்கலாம் என்றும் முன்னதாக தகவல்கள் வந்தன. சாம்பியன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை கேகேஆர் கேப்டன்சியில் இருந்து நீக்குமா? என்பது சுவாரஸ்யமாக மாறியுள்ளது.