MS Dhoni: தோனியை மிஞ்ச எவரும் இல்ல, டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் – பினிஷராக 47 முறை வெற்றி தேடி கொடுத்து சாதனை!

First Published | Aug 23, 2024, 9:21 AM IST

சிறந்த பினிஷராக அணிக்கு வெற்றி தேடி கொடுப்பவர்களின் பட்டியலில் எம்.எஸ்.தோனி முதலிடத்தில் இருக்கிறார்.

MS Dhoni

MS Dhoni Best Finisher: கிரிக்கெட்டைப் பொறுத்த வரையில் பேட்டிங் வரிசையில் ஒவ்வொரு பேட்ஸ்மேனின் பங்கும் முன்பே வரையறுக்கப்பட்டுள்ளது. அணியின் வெற்றிக்கு பேட்டிங், பவுலிங், பீல்டிங் எல்லாமே முக்கியமானது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பவர்பிளேயில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதே அதிரடியை தொடர்ந்து ரன்கள் குவித்தால் மட்டுமே அந்த அணியால் அதிக ரன்கள் குவிக்க முடியும்.

MS Dhoni

அதே போன்று லோயர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் தங்களது பங்கிற்கு சிறப்பான பங்களிப்பை அணிக்கு அளிக்க வேண்டும். இவை எல்லாவற்றிலும் ஒரு அணியில் பினிஷரின் பங்கு மிகவும் முக்கியமானது. சிறந்த பினிஷரால் மட்டுமே அணியின் வெற்றி தோல்வியை கடைசி நேரத்தில் உறுதி செய்ய முடியும். டெத் ஓவர்களில் அணிக்கு தேவையான ரன்களை எடுத்து கொடுப்பது என்பது ஒவ்வொரு பேட்ஸ்மேனின் கடமை.

Tap to resize

Best Finisher MS Dhoni

இதுவே ஒரு ரன் சேஸ் செய்கிறது என்றால் அந்த அணியின் வெற்றிக்கு தேவையான ரன் எடுத்து கொடுத்து அணியின் வெற்றிக்கு வித்திடுபவரே சிறந்த பினிஷர். அப்படிப்பட்ட பினிஷர் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க…

MS Dhoni Best Finisher

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி கிரிக்கெட் இதுவரை பார்த்திராத ஒரு சிறந்த பினிஷராக காட்சி அளிக்கிறார். எப்போதும் அழுத்தம் நிறைந்த போட்டியின் போது பொறுமை இழக்காத தனது குணம், விளையாட்டிற்கான அவரது அணுகுமுறை தோனியை வேறுபடுத்தி காட்டுகிறது. கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி ரன் சேஸிங்கில் மட்டும் 47 முறை அவுட்டாகாமல் இருந்து புதிய சாதனை படைத்திருக்கிறார்.

MS Dhoni

சிறந்த பினிஷருக்கன உதாரண பட்டியலில் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 91 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணிக்கு டிராபியை வென்று கொடுத்தார். எப்போதும் சூழ்நிலைகளின் தேவைக்கு ஏற்ப விளையாட்டு திறமையை மாற்றியமைத்து அணிக்கு வெற்றி தேடிக் கொடுக்கிறார். தோற்கும் போட்டியிலும் கூட ஒரு ரன்னில் அணிக்கு வெற்றி தேடிக் கொடுக்கிறார்.

Michael Bevan

மைக்கேல் பெவன்:

சிறந்த பினிஷர்களின் பட்டியலில் தோனிக்கு பிறகு 2ஆவது இடம் பிடித்திருப்பவர் மைக்கேல் பெவன். பல போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிந்த போதிலும் கூட தனது சிறப்பான பேட்டிங்கால் அணியை மீட்டு வந்துள்ளார். பெவன் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,912 ரன்கள் குவித்துள்ளார். பெவன் விளையாடிய போட்டிகளில் கிட்டத்தட்ட 67 சதவிகிதம் அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்துள்ளார்.

Lance Klusener

லான்ஸ் க்ளூசனர்

லான்ஸ் க்ளூசனர் கிரிக்கெட்டின் சிறந்த ஃபினிஷர்களில் ஒருவராகக் போற்றப்படுகிறார். கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையில் 171 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,576 ரன்கள் குவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி 192 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

Jos Butler

ஜோஸ் பட்லர்:

இங்கிலாந்தின் தற்போதைய கேப்டனான ஜோஸ் பட்லர், அழுத்தத்தின் கீழ் விளையாடுவதற்கும் போட்டியை வெற்றியோடு முடித்து கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஃபினிஷர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 2011 இல் அறிமுகமானதில் இருந்து, பட்லர் ஒரு தொடக்க ஆட்டக்காரராக இருந்து லோயர் ஆர்டர் ஃபினிஷர் வரை எல்லா வடிவங்களிலும் தனது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் சராசரி 40.43 மற்றும் அதிகபட்ச ஸ்கோர் 162 ஆகும்.

Kieron Pollard

கெரான் போலார்டு

வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேன் கெரான் போலார்டு. வலுவான தோற்றம், பேட்டிங் திறமை ஆகியவற்றின் மூலமாக 100மீ தூரத்திற்கும் எளிதாக சிக்ஸர் அடிக்கும் திறமை கொண்டவர். டெத் ஓவர்களில் எந்த பந்து வீச்சாளர்களையும் எளிதாக சமாளித்து அவர்களது பந்தை அடித்து நொறுக்கவும் தயங்கமாட்டார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

Latest Videos

click me!