6 அடி 5 அங்குல கிரிக்கெட்டர் சாய் கிஷோரின் மனைவி யார் தெரியுமா?

First Published | Aug 21, 2024, 8:00 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் சாய் கிஷோரின் மனைவி அன்மோல் கிரண். சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலம். பயோலஜி மற்றும் பயோ இன்ஃபர்மேடிக்ஸ் பிரிவில் பட்டம் பெற்ற இவர், ஆராய்ச்சியிலும் ஈடுபாடு கொண்டவர்.

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் கிரிக்கெட் வீரர் ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர். சுழற்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனான சாய் கிஷோர் நேபாள் அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2022 ஆம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். இந்த தொடரில் இந்தியா தங்கப் பதக்கம் கைப்பற்றியது.

Sai Kishore and Wife Anmol Kiran

இதுவரையில் 3 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சாய் கிஷோர் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை. ஆனால், தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியின் கேப்டனாக சாய் கிஷோர் இடம் பெற்று விளையாடினார்.

Tap to resize

Sai Kishore and Wife Anmol Kiran

இந்த தொடரில் சாய் கிஷோர் தலைமையிலான ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் 2ஆவது தகுதிச் சுற்று போட்டியுடன் வெளியேறியது. 2016 – 2017 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே டிராபி தொடரின் மூலமாக அறிமுகமானார். இதே போன்று ஐபிஎல் தொடரில் முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுகமான, சாய் கிஷோர் அதன் பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றார்.

Sai Kishore and Wife Anmol Kiran

கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரூ.3 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார். இதுவரையில் 5 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 39 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 729 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு, 166 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Sai Kishore and Wife Anmol Kiran

இதே போன்று 54 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 402 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 92 விக்கெட்டுகள் கைப்பற்றினார். சாய் கிஷோரின் மனைவி யார் தெரியுமா? கடந்த 2022 ஆம் ஆண்டு அன்மோல் கிரணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர். சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் அன்மோல் கிரண், தனது கணவருடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

Sai Kishore

பயோலஜி மற்றும் பயோ இன்ஃபர்மேடிக்ஸ் பிரிவில் பட்டம் வென்றுள்ளார். அதோடு, ஆராய்ச்சியிலும் ஈட்டுபட்டுள்ளார். ஆராய்ச்சி பிரிவுகளில் பல வெளியீடுகளையும் செய்துள்ளார். இதன் மூலமாக கிரண் கல்வியில் சிறந்த அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளார்.

Sai Kishore and Wife Anmol Kiran

சாய் கிஷோர் வியாஷா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலையில் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னையில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் பிசிஏ படிப்பை முடித்துள்ளார்.

Latest Videos

click me!