நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக இந்திய அணியில் அவர் இடம் பெறவில்லை. அவருக்கு மிகவும் பிடித்த அசைவ உணவு எதுவென்று பார்ப்போம்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விரைவில் அணிக்கு திரும்ப உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
26
உடற்தகுதி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள்
ஷமியின் உடற்தகுதி குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுந்தன. இதனால் ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தொடர்களில் அவர் இடம்பெறவில்லை. இது விவாதப் பொருளானது.
36
உள்நாட்டுப் போட்டிகளில் அதிர்ச்சி
உடற்தகுதி கேள்விகளுக்கு மத்தியிலும், விஜய் ஹசாரே, சையத் முஷ்டாக் அலி போன்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
ஷமி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் கலக்க தயாராகிவிட்டார். முறையான டயட்டை பின்பற்றும் அவருக்கு அசைவம் மிகவும் பிடிக்கும். இதுவே அவரது பலத்தின் ரகசியம் என பேட்டியில் கூறியுள்ளார்.
56
ஷமிக்கு பிடித்த அசைவ உணவு
முகமது ஷமிக்கு அசைவத்தில் மட்டன் என்றால் மிகவும் பிடிக்கும். அவரது நண்பர் உமேஷ் யாதவ் இதை வெளிப்படுத்தியுள்ளார். ஆட்டுக்கறி இல்லாமல் அவரது சாப்பாடு முழுமையடையாது.
66
ஒருவர் எவ்வளவு மட்டன் சாப்பிடலாம்?
அசைவம் சாப்பிடவில்லை என்றால் ஷமியின் பந்துவீச்சில் வேகம் இருக்காது என உமேஷ் யாதவ் கூறியுள்ளார். ஷமி தினமும் 1 கிலோ மட்டன் சாப்பிடுவார் என்ற தகவல் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.