பொதுவாக டாஸ் போடும்போது இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் ஹர்திக் பாண்ட்யா கைகுலுக்க சென்ற நிலையில், ஆனால் சுப்மன் கில் அதை தவிர்த்தது ரசிகர்களிடம் பெரும் கண்டனத்தை பெற்றுள்ளது.
இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், ''சுப்மன் கில் செய்தது தவறு. ஒரு கேப்டன் இப்படி ஈகோவுடன் இருந்தால் அது சரியல்ல'' என்று கூறி வருகின்றனர்.
குஜராத் டைட்டனஸ் அணியில் இருவரும் விளையாடினார்கள்
ஹர்திக் பாண்ட்யா குஜராத் டைட்டனஸ் அணியின் கேப்டனாக 2 ஆண்டுகள் இருந்தபோது சுப்மன் கில் அவருக்கு கீழ் விளையாடினார். ஹர்திக் பாண்ட்யா தலைமையில் குஜராத் அணி 2022ல் கோப்பையையும் வென்றது.
ஒரே அணியில் விளையாடியதால் ஹர்திக் பாண்ட்யாவுக்கும், சுப்மன் கில்லுக்கும் இடையே நல்ல புரிதல் உண்டு. அதன்பிறகு பாண்ட்யா குஜராத் அணியில் இருந்து வெளியேறி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆனது குறிப்பிடத்தக்கது.