ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த சாய் சுதர்சன்! மாஸ் காட்டிய தமிழ்நாடு வீரர்!

Published : May 31, 2025, 09:44 AM IST

குஜராத் டைட்டன்ஸ் வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் 2025 சீசனில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

PREV
14
Sai Sudarshan IPL 2025 Record

ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 228 ரன்கள் குவித்தது. 

ரோகித் சர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். பின்பு விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

24
சாய் சுதர்சனின் மிகப்பெரும் சாதனை

குஜராத் அணியின் தொடக்க வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் 49 பந்துகளில் 80 ரன்கள் அடித்து அசத்தினார். இந்த போட்டி மட்டுமின்றி நடப்பு ஐபிஎல் சீசன் முழுவதும் தனி ஆளாக குஜராத் அணிக்கு ரன்களை குவித்த சாய் சுதர்சன் நேற்றைய போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்தார். 

அதாவது சாய் சுதர்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் 15 இன்னிங்ஸ்களில் 759 ரன்களை குவித்து மலைக்க வைத்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல் 2025 சீசனில் 700 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

34
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரர் என்ற சாதனையையும் சாய் சுதர்சன் பெற்றுள்ளார். அவர் 1 சதம் மற்றும் 6 அரை சதங்களுடன் 759 ரன்கள் குவித்துள்ளார். மேலும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் 5வது இடத்தில் சாய் சுதர்சன் உள்ளார். 

இதற்கு முன்பு விராட் கோலி 2016 ஐபிஎல் சீசனில் 973 ரன்களும், சுப்மன் கில் 2023ல் 890 ரன்களும், ஜோஸ் பட்லர் 2022ல் 863 ரன்களும், டேவிட் வார்னர் 2026ல் 848 ரன்களும் எடுத்திருந்தனர். இப்போது சாய் சுதர்சன் 2025ல் 759 ரன்கள் அடித்துள்ளார்.

44
இங்கிலாந்து டெஸ்ட்டில் விளையாடும் சாய் சுதர்சன்

தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் ஐபிஎல் தொரில் அசத்தியுள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். கண்ணை மூடிக்கொண்டு பேட்டை சுத்தாமல் பந்துகளை நன்றாக கவனித்து கவர் டிரைவ், புல் ஷாட், பிளிக் உள்லிட்ட புரோபேஷனல் கிரிக்கெட் ஷாட்களை ஆடி அதிக ரன்கள் குவித்துள்ளார் சாய் சுதர்சன். 

இவர் டி20, ஓடிஐ, டெஸ்ட் என அனைத்து பார்மட்களுக்கும் ஏற்ற வீரர் என்று பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories