குஜராத்துக்கு முதுகில் குத்திய பாண்டியா – ஐபிஎல் 2ஆவது தகுதிச் சுற்றுக்கு முன்னேறிய MI!

Published : May 31, 2025, 05:26 AM IST

IPL 2025 Eliminator MI vs GT : ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று 2ஆவது தகுதிச் சுற்று போட்டிக்கு முன்னேறியது.

PREV
15
ரோகித் சர்மா 81 ரன்கள் குவிப்பு

IPL 2025 Eliminator MI vs GT : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்னும் 2 போட்டிகளுடன் முடிவுக்கு வருகிறது. ஐபிஎல் 2025 பிளே சுற்றுக்கு பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னேறி இருந்தன. இதில் முதல் தகுதிச் சுற்று போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு சென்றது. இதையடுத்து நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மாவின் அதிரடியால் 228 ரன்கள் குவித்தது.

25
ஐபிஎல் 2025 - மும்பை இந்தியன்ஸ்

இந்தப் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் வீரர் ரோகித் சர்மா கொடுத்த 2 கேட்ச் வாய்ப்புகளை குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் தவறவிடவே ரோகித் சர்மா 50 பந்துகளில் 9 பவுண்டரி 2 சிக்ஸர் உள்பட 81 ரன்கள் குவித்தார். பிரசித் கிருஷ்ணா வீசிய ஓவரில் கொடுத்த கேட்சை ஜெரால்ட் கோட்ஸி தவறவிட்டார். அடுத்த ஓவரில் சிராஜ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் குஷால் மெண்டிஸ் எளிதான கேட்சை தவறவிட்டார்.

அதன் பிறகு சிறப்பாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா வெறும் 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். இறுதியில் அவர் 17ஆவது ஓவரில் 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் 47 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும், திலக் வர்மா 25, ஹர்திக் பாண்டியா 22 ரன்கள் எடுக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் குவித்தது.

35
ஐபிஎல் 2025 எலிமினேட்டர் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்

பின்னர் கடின இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் சுப்மன் கில் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். குசால் மெண்டிஸ் 20 ரன்கள் எடுத்து வெளியேற சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர் ரன்கள் குவித்தனர். ஒருபுறம் இவர்களது பேட்டிங்கை பார்த்து மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் பயந்த நிலை ஏற்பட்டது. எனினும், வாஷிங்டன் சுந்தரால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவர் 24 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

45
ஐபிஎல் எலிமினேட்டர் - குஜராத் டைட்டன்ஸ் வெளியேறியது

கடைசி வரை போராடிய சாய் சுதர்சன் 49 பந்துகளில் 10 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 80 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஷெர்ஃபேன் ரூதர்போர்டு 24 ரன்கள் எடுத்தார். ஷாருக் கான் 13 ரன்கள் எடுக்கவே குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

55
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி

இதன் மூலமாக குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் 2025 தொடரிலிருந்து வெளியேறியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் நாளை ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியானது இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும். 

இதில் பஞ்சாப் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் முறையாக டிராபி வெல்லும். அப்படி இல்லை என்றால் ஆர்சிபி வெற்றி பெற்றால் முதல் முறையாக டிராபியை கைப்பற்றும். இதில் எதுவும் நடக்கவில்லை, மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டிக்கு சென்று ஆர்சிபியை வீழ்த்தினால் 6ஆவது முறையாக டிராபியை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories