ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்று முன்னிலையில் உள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1 ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
27
ஆஸ்திரேலியா
எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சி செய்யும். இதனால், இந்தப் போட்டி இரு அணிகளுக்குக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
37
இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம்
3ஆவது போட்டி நடக்கும் இந்தூரின் ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம் இந்திய அணிக்கு மிகவும் ராசியான ஒரு மைதானம். ஏனென்றால், இதற்கு முன்னதாக நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.
47
இந்தியா - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட்
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்தியா 326 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்னதாக இந்த இந்தூர் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் அதிக ரன்கள் குவித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க...
57
மாயங்க் அகர்வால்:
இந்தூரின் ஹோல்கர் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் மாயங்க் அகர்வால் அதிகபட்சமாக 243 ரன்கள் எடுத்தார். ஆம், கடந்த 2019 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் மாயங்க் அகர்வால் 330 பந்துகளில் 28 பவுண்டரிகள், 8 சிக்சர்கள் உள்பட 243 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
67
விராட் கோலி:
இந்தூர் மைதானத்தில் அதிகபட்ச ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி 2ஆவது இடம் பிடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 366 பந்துகளில் 20 பவுண்டரிகள் உள்பட 211 ரன்கள் குவித்தார்.
77
அஜின்க்யா ரகானே:
இந்த இந்தூர் மைதானத்தில் அதிகபட்சமாக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் அஜின்க்யா ரகானே 3ஆவது இடம் பிடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் அஜின்க்யா ரகானே 381 பந்துகளில் 4 சிக்சர்கள் 18 பவுண்டரிகள் உள்பட 188 ரன்கள் குவித்தார். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 321 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.